காலையில் இந்த விஷயங்களை பார்க்காதீங்க ப்ளீஸ்!

First Published | Apr 27, 2023, 2:07 PM IST

நாம் காலையில் எழுந்ததும் சில விஷயங்களை பார்க்கும் போது மோசமான விளைவுகள் ஏற்படுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 

To boost confidence, follow these vastu tips

பிரம்ம முகூர்த்த நேரத்தில் (அதிகாலை) எழுந்து கொள்பவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் இந்த நேரத்தில் தான் நாம் தெய்வங்களை தேட வேண்டும். இறைபக்தி உள்ளவர்கள் எப்போதும் அதிகாலையில் எழுந்து கொள்ளும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இப்படி அதிகாலை எழுந்து கொள்பவரின் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் எப்போதும் இருக்கும். சிலர் அதிகாலையில் எழுந்தபோதும் அவர்களுடைய வாழ்க்கையில் நிதி நெருக்கடி, மனக்கஷ்டம் காணப்பட்டால், அதற்கு காரணம் அவர்கள் காலையில் எழுந்ததும் பார்க்கும் சில விஷயங்கள் தான். நீங்களும் இந்த பழக்கங்களை வைத்திருந்தால் வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படி அவற்றை மாற்றிக் கொள்வது நல்லது.  . 

கண்ணாடி பார்க்கலாமா? 
காலையில் எழுந்ததும் கண்ணாடியை பார்க்கும் பழக்கத்தில் கைவிட வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழக்கம் உங்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். காலையில் எழுந்ததும் உங்களுடைய உள்ளங்கையை முகத்தில் ஒற்றி எடுத்து அதனை காணலாம். இது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். 

Tap to resize

நிழல் பார்க்கலாமா? 
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யலாம். சூரிய ஒளியை பார்ப்பதாலும், சூரிய நமஸ்காரம் செய்வதாலும் வைட்டமின் டி எளிதாக கிடைக்கிறது. ஆனாலும் காலையில் தன்னுடைய சொந்த நிழலை ஒருவர் பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. காலையில் உங்களுடைய நிழலைப் பார்ப்பது பொருளாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், மேற்கு திசையின் நிழலைப் பார்ப்பது ரொம்ப அசுபமானது. 

வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டில் அலங்காரத்திற்காக வைத்திருக்கும் போலி பாத்திரங்களை காலையில் பார்ப்பது நல்லதல்ல. இது வாஸ்து குறைபாடாகத் தெரிகிறது. குறிப்பாக வீட்டில் அழுக்கு பாத்திரங்கள் தேங்கக் கூடாது. எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதனால் தான் இரவில் பாத்திரம் கழுவ வேண்டும் என்று பெரியோர்கள் எப்போதும் கூறுவார்கள். 

இதையும் படிங்க:  மே மாதத்தின் முக்கிய பண்டிகைகள், விரதம், ஆன்மீக விசேஷங்கள் பற்றிய முழுவிவரம்!

வாஸ்து சாஸ்திரப்படி, ஆக்ரோஷமான காட்டு விலங்குகளின் படத்தை வீட்டில் வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் தகராறு ஏற்படும். சுபமாக இருக்காது. இந்த படங்களை காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாது. இது சுபமான விஷயம் அல்ல. இது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. 

இதையும் படிங்க: வெட்டி வேரை நம் வீட்டில் வைத்தால்... எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும்..வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்!

Latest Videos

click me!