தினமும் தூங்கும் முன்பு இதை செய்யுங்கள்.! உங்களுக்கு அதிர்ஷ்டமும், நிம்மதியும் பெருகும்..

First Published | Apr 26, 2023, 4:06 PM IST

நாம் இரவில் தூங்கும் முன் செய்யும் சில காரியங்கள் நம்முடைய அதிர்ஷ்டத்தையே மொத்தமாக மாற்றிவிடும்.  
 

ஜோதிடத்தின்படி ஒருவரின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அதிர்ஷ்டம் முக்கியமானது. அந்த அதிர்ஷ்டத்தை வசமாக்க ஜோதிடம் வாழ்வில் சில பழக்க வழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்துகிறது. அதன்படி, இரவில் தூங்கும் முன் சில காரியங்களை செய்ய வேண்டும். எப்போதும் இரவில் சமையலறையை சுத்தம் செய்த பின் தூங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இரவில் சமையலறையை அழுக்காக வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், குறிப்பாக பாத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தால், அது வீட்டிற்கு வறுமையைத் தரும் என்பது நம்பிக்கை. 

கற்பூரம் 

ஜோதிட சாஸ்திரப்படி, இரவில் தூங்கும் முன், நம் அறையில் கற்பூரத்தை எரிக்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது, நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வருகிறது. இதை செய்தால் அதிர்ஷ்டத்தைப் பெறத் தொடங்குகிறோம். 

தூங்கும் நிலை 

ஜோதிடத்தின் படி, தூங்கும் போது நம் கால்கள் அறையின் கதவை நோக்கி இருக்கக்கூடாது. இதை இரவில் கவனிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது, கதவின் எதிர் திசையில் கால்களை வைத்துதான் தூங்க வேண்டும். 

Tap to resize

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரவில் தூங்கச் செல்வதற்கு முன், உங்களுடைய படுக்கையை சரி பாருங்கள். அது உடைக்கப்படவோ, விரிசல் ஏற்படவோ அல்லது சேதமடைந்தோ இருக்கக் கூடாது. எப்போதும் திடமான படுக்கையில் தூங்க வேண்டும். 

தண்ணீர் அருந்துங்கள் 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரவில் தூங்கும் முன் எப்போதும் தண்ணீர் குடித்துவிட்டு தூங்க வேண்டும். அசுத்தமான வாயுடன் தூங்கக்கூடாது. இரவில் தூங்கும் முன் கை, கால்களை கழுவிவிட்டு தூங்க வேண்டும். இது வீட்டில் செழிப்பை கொண்டு வரும். 

இதையும் படிங்க: சந்திர கிரகணம் 2023: இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்கணும்!! ஏன் அப்படி சொல்றாங்க தெரியுமா?

தியானம் அவசியம்! 

ஜோதிடத்தின் படி, ஒருவர் எப்போதும் இரவில் தூங்கும் முன் சாத்விக் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அதை செய்யாதவர்கள் இஷ்ட தெய்வத்தை தியானித்து தூங்க வேண்டும். இதன் மூலம், அதிர்ஷ்டம் வர தொடங்குகிறது. மேலும் மனதின் அமைதியின்மையும் நீங்கி நிம்மதி பிறக்கும். 

இதையும் படிங்க: பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறீங்களா? தேங்காய் வைத்து இந்த பரிகாரத்தை இன்றே செய்யுங்கள்.. கண் திருஷ்டி கூட போகும்

Latest Videos

click me!