பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறீங்களா? தேங்காய் வைத்து இந்த பரிகாரத்தை இன்றே செய்யுங்கள்.. கண் திருஷ்டி கூட போகும்

First Published | Apr 26, 2023, 2:03 PM IST

வீட்டில் வாஸ்து பிரச்சனைகள் இருந்தால் நிதி நெருக்கடி பிரச்சனைகள் ஏற்படும். அதற்கு தேங்காய் பரிகாரம் செய்தால் போதும். 

நம் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகள், யாரோ ஒருவரின் கண் திருஷ்டி காரணமாக, பொருளாதார நிலை பாதிக்கப்படுகிறது. எவ்வளவு ஆயிரம் சம்பாதித்தாலும் பணம் கையில் நிற்காமல் பிரச்சனைகள் மேலும் மேலும் உயரும். கெட்ட கண் திருஷ்டி இருந்தால் வருமானம் குறைய ஆரம்பிக்கும். 

வாஸ்து குறைபாடுகள் இருந்தால் வருமானம் குறைய ஆரம்பித்து, அடுத்து வரும் நாள்களில் செலவுகளும் அதிகரிக்கின்றன. இப்படியான பணப்பற்றாக்குறையால் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். வாஸ்து தோஷத்தால் சிரமப்பட்டு, அதிலிருந்து விடுபட விரும்பினால், தேங்காயை வைத்து எளிய பரிகாரம் செய்யலாம்.  

Tap to resize

மகாலட்சுமிக்கு பரிகாரம் 

இந்து சாஸ்திரத்தின்படி, தேங்காய் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எல்லா சுப காரியத்தின் போதும் தேங்காய் உடைக்கப்படுகிறது. கலச பூஜையிலும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. செல்வத்தின் கடவுளான மகாலட்சுமிக்கு தேங்காய் மிகவும் பிடிக்கும். ஆகவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்குச் சென்று, லட்சுமிக்கு தேங்காய் வாங்கி வைக்கலாம். 

இதையும் படிங்க: வீட்டு பூஜை அறையில் தண்ணீர் வைப்பதால் இவ்ளோ நன்மைகளா?!

பணம் குவிய! 

நீங்கள் நிதி நெருக்கடியால் மிகவும் கஷ்டப்பட்டால், செவ்வாய் கிழமையன்று இந்த தேங்காய் பரிகாரம் செய்யுங்கள். தேங்காய் மீது மல்லிகை எண்ணெய் பூசுங்கள். இப்போது தேங்காய் மீது குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரையவும். பின்னர் கோவிலுக்குச் சென்று அந்த தேங்காயை அனுமனுக்குப் படைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை குறைந்தது 7 செவ்வாய் கிழமைகளாவது செய்யவும். 

தேய்காய் பரிகாரம்! 

நீங்கள் பணக்கஷ்டத்தில் இருந்தால், அதிலிருந்து முற்றிலும் விடுபட விரும்பினால், வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு தேங்காய், தாமரை மலர், தயிர், வெள்ளை ஆடைகள், வெள்ளை இனிப்புகளை வழங்கவும். அதன் பின்னர் சிவப்பு நிற துணியில் ஒரு தேங்காயை கட்டி அப்படியே வீட்டில் அப்படி ஒரு இடத்தில் வைக்கவும். அது யாரும் பார்க்க முடியாத இடமாக இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

கண் திருஷ்டி! 

கெட்ட கண் திருஷ்டி இருந்தால் உங்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. இதற்கு தேங்காயை வைத்து எளிய பரிகாரத்தை செய்யலாம். தேங்காய் மீது கண்மையை பூசவும். இதை வீட்டை சுற்றி கொண்டு வந்த பின்னர்... ஓடும் நதியில் அல்லது சின்ன வாய்க்கால் போன்ற நீரோடையில் விட்டுவிடுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் இருந்து தீய சக்திகள் விலகும். இத்துடன் பார்வைக் குறைபாடும் நீங்கும். 

இதையும் படிங்க: சந்திர கிரகணம் 2023: இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்கணும்!! ஏன் அப்படி சொல்றாங்க தெரியுமா?

Latest Videos

click me!