Today Rasipalan 27th Apr 2023: உங்களது பொருளாதார திட்டங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும்..!

First Published | Apr 27, 2023, 5:30 AM IST

ஏப்ரல் 27ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேஷம்:

இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தேங்கிக்கிடந்த சொத்து வேலைகளில் கவனம் செலுத்துங்கள்; இன்று முடிந்துவிடும். நண்பர்கள் அல்லது வெளிநபர்களின் அறிவுரையை கேட்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே முடிவெடுங்கள். 
 

ரிஷபம்:

மாணவர்களுக்கு வெற்றி கிடைக்காததால் அதிருப்தி அடைவார்கள். செலவு செய்யும்போது பட்ஜெட்டை கவனத்தில்வைத்து செயல்படவும். தொழில் வழக்கம்போல நார்மலாக இருக்கும். 
 

Tap to resize

மிதுனம்:

முயற்சி செய்துகொண்டே இருங்கள். இன்றைய தினம் உங்களது பெரும்பாலான வேலைகள் சரியான நேரத்தில் முடியும். பொறாமையால் உங்களை பற்றி சிலர் உங்களுக்கு பின்னால் விமர்சிப்பார்கள். அந்தமாதிரியான நபர்களிடமிருந்து விலகி இருக்கவும். 
 

கடகம்:

வீட்டிற்கு ஸ்பெஷலான உறவினர்கள் வருகையால் பிசியாக இருப்பீர்கள். குழந்தையிடமிருந்து நற்செய்து கிடைக்கும். சிறிய விஷயங்களைக்கூட பொருட்படுத்துங்கள். மிகக்கவனமாக இருக்கவும். கோபத்தை குறைக்கவும்.  உங்கள் அமைதியான சுபாவம் மரியாதையை உயர்த்தும்.
 

சிம்மம்:

உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் வெற்றி பெற்ற பின் உங்களை எதிர்த்தவர்கள் எல்லாரும் உங்கள் பின்னால் வருவார்கள். உங்கள் மனதை கட்டுப்படுத்தவும். 
 

கன்னி:

கிரக அமைப்புகள் இன்று உங்களுக்கு ஆதாயகரமாக அமையும். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தவும். சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். கோபப்படாமல் அமைதியாக சூழல்களை கையாளவும். 
 

துலாம்:

நீங்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களின் கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் கிடைக்கும். தொழிலில் அனைத்து செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனிக்கவும்.

விருச்சிகம்:

ஆன்மீக பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். முக்கியமான நபரை சந்திப்பீர்கள். மாணவர்களின் கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் கிடைப்பதால் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவார்கள். உங்கள் விவகாரங்களில் வெளிநபர்களை தலையிட விடுவதால் பிரச்னை பெரிதாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும் நாள்.
 

தனுசு:

உங்கள் பொருளாதார திட்டங்கள் நிறைவேறும் நாளாக அமையும். வெற்றிக்காக உழைத்துக்கொண்டே இருங்கள். முதலீடுகளுக்கு ஏற்ற நாள். சமூக வேலைகளில் பங்களிப்பு செய்வீர்கள். உங்கள் ரகசியம் அம்பலப்படும். 
 

மகரம்:

பெரிய நபர்களுடனான அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். சமூகநல செயல்களில் உங்கள் மீதான மதிப்பு உயரும். தேங்கிக்கிடந்த வேலைகள் முடிவுக்குவரும். யார் பேச்சையும் கேட்காமல் நீங்களே சுயமாக முடிவெடுங்கள். பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணிச்சுமையால் வீட்டு விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டீர்கள்.
 

கும்பம்:

மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதிற்கு சரி என்று படுவதில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரைகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். 
 

மீனம்:

நிலுவையில் இருந்த சொத்து விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். ஸ்பெஷலான ஒரு நபரை சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். உயரதிகாரிகள் மற்றும் அனுபவஸ்தர்கஈன் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

Latest Videos

click me!