கவலைகள் நீங்க கற்பூரம் ஏற்றும் பரிகாரம்! ஒரு கற்பூரம் வாழ்வையே மாற்றும்
மனக்கவலையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கற்பூரத்தை கொண்டு இந்த ஒரு பரிகாரத்தை செய்யுங்கள். உங்களது வாழ்க்கையே மாறிவிடும்.
மனக்கவலையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கற்பூரத்தை கொண்டு இந்த ஒரு பரிகாரத்தை செய்யுங்கள். உங்களது வாழ்க்கையே மாறிவிடும்.
Vastu Tips How To Get Rid Of Mental Stress Control : இன்றைய மாறிவரும் உலகில் மக்களின் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் காண முடிகிறது வேலைப்பளு மற்றும் குடும்ப அழுத்தத்தின் காரணமாக மக்கள் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். இதன் காரணமாக அவர்களால் நிம்மதியாக கூட தூங்க முடிவதில்லை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினரும் பல மன கவலைகளுடன் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மனரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கத் தொடங்குகிறார்கள். இருப்பினும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மன ஆரோக்கியமும் ரொம்பவே அவசியம். எனவே நீங்களும் ஏதேனும் மனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அவதிப்படுகிறீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வாஸ்து குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். உங்களது மனம் ஆரோக்கியம் மேம்படும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் தூங்கும் திசை சரியானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, ஒருவர் எப்போதுமே கிழக்கு திசை நோக்கி தலை வைத்து தான் தூங்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. இந்த திசையில் தூங்கினால் மன அழுத்தம் மற்றும் பிற வகையான மனநல பிரச்சனைகளை தடுக்கப்படும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி மனநல பிரச்சனையிலிருந்து விடுபட,முதலில் உங்களது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அது ரொம்பவே முக்கியமானது. வீடு தூய்மையாக இருந்தால் மட்டுமே வீட்டில் நேர்மறை சக்திகள் பாய்ந்து எதிர்மறை சக்திகள் வீட்டை விட்டு வெளியேறும். இதன் காரணமாக மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதுபோல வீடு துடைக்கும் தண்ணீரில் உப்பு கலந்து துடைக்க வேண்டும்.
இதையும் படிங்க: மொபைல் வால்பேப்பர் இப்படி வைத்தால் அசுபமாகும்!! எதை வைக்கனும் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் கற்பூரம் ஏற்றினால் மன அமைதி கிடைக்கும். கற்பூரமானது மன அழுத்தத்தை குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்த தீர்வை நீங்கள் செய்வதன் மூலம், உங்களை மன வலிமையாக்கி கொள்ளலாம்.
இதையும் படிங்க: நினைத்த காரியம் நிறைவேற சனிக்கிழமை இந்த இடங்களில் விளக்கேற்றுங்கள்!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வெள்ளி பொருட்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும், மன ஆரோக்கியத்தை பேணுவதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் மனம் சந்திரனுடன் தொடர்புடையது. அதுபோல வெள்ளியும் சந்திரனுடன் தொடர்புடையது. எனவே வெள்ளியால் செய்யப்பட்ட சந்திர யந்திரத்தை, வெள்ளி மோதிரத்துடன் சேர்த்து வாங்குங்கள். உங்களது மன ஆரோக்கியம் மேம்படும்.