பணத்தை எப்போதும் இப்படி வைத்தால் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.. இந்த விஷயங்களை கவனிங்க!!!

First Published | Jun 29, 2023, 1:26 PM IST

வீட்டில் பணம் சேர எந்தெந்த வாஸ்து குறிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

நாம் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், கடுமையாக உழைத்தாலும் வீட்டின் வாஸ்துவில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் பொருளாதாரம் மந்தமாகவே காணப்படும். குடும்பத்திலும் நிம்மதி இருக்காது. நம்முடைய வீட்டில் மகிழ்ச்சியும், பணமும் நிலைத்து நிற்க வாஸ்து குறிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இங்கு சில முக்கியமான வாஸ்து குறிப்புகளை காணலாம். 

நகை பணம் வைக்க வேண்டிய திசை: 

நகைகள், பணம், நிதி சார்ந்த ஆவணங்களை தென்மேற்கு திசையில் வைத்திருப்பது நல்லது. இதனால் பண அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு நிலைக்கும். இது மிக முக்கியமான வாஸ்து குறிப்புகளில் ஒன்றாகும்.

Tap to resize

பணம் பெருக செய்ய வேண்டிய காரியம்: 

செல்வம், செழிப்பைக் கொண்டு வர வீட்டின் வடகிழக்கு திசை போதுமான திறந்தவெளியாக இருக்க வேண்டும். வடக்குத் திசையில் கனமான பொருள்கள் எதுவும் வைக்கக்கூடாது. அவை பணம் மற்றும் ஆற்றல் வருவதில் தடையாக மாறும்.

பணத்தை ஏற்க வாஸ்து படி நல்ல நிறம் எது? 

செல்வம், புகழ் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் மிகவும் சக்திவாய்ந்த நிறம் தங்க நிறம் தான். 

பண அதிர்ஷ்டத்தை ஈர்க்க வாஸ்து படி எந்த பூஜை சிறந்தது? 

நீங்கள் பணத்தை ஈர்க்க விரும்பினால் லட்சுமி பூஜை ஏற்றது. இந்த பூஜைதான் வீட்டிற்கு மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

குபேர பகவானின் மூலை? 

உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலை குபேரரின் மூலையாக கருதப்படுகிறது. இந்த திசையில் இருந்து ஷூ ரேக்குகள், கனமான பொருள்கள், கழிப்பறை போன்ற எதிர்மறையான விஷயங்களை அகற்றுமாறு வாஸ்து பரிந்துரைக்கிறது.

Latest Videos

click me!