செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்.. அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!!

First Published | Jun 29, 2023, 10:22 AM IST

செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் 3 ராஜயோகங்களால் பயன்பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

நவகிரகங்களின் அதிபதியானவர் செவ்வாய். இவர் தைரியம், வீரத்தை தருபவர். தற்போது செவ்வாய் சந்திரன் ஆளும் கடக ராசியில் தான் பயணிக்கிறார். செவ்வாய் வரும் ஜூலை 01ஆம் தேதி அன்று சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். இங்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை இருப்பார் என ஜோதிடம் கணித்துள்ளது. கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு செவ்வாய் பெயர்ச்சி செய்வதால் 3 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அவையாவன: நீச்சபங்க ராஜயோகம், மத்ஸ்ய யோகம் விஷ்ணு யோகம் போன்றவையாகும். இதன் தாக்கம் 3 ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது.

மிதுனம் 

மிதுன ராசியுடைய மூன்றாம் வீட்டிற்குள் செவ்வாய் நுழைகிறார். இந்த வீடு தான் தைரியம், வீரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஆகவே இந்த நேரத்தில் தைரியம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் முதலீடுகள் கணிசமான லாபம் ஈட்டித் தரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் லாபம் காண்பார்கள். உங்கள் எதிரிகள் துவண்டு போவார்கள். எல்லா காரியங்களிலும் நீங்களே வெற்றி அடைவீர்கள். அலுவலகத்தில் உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்காக தவம் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். 

Tap to resize

தனுசு 

தனுசு ராசியுடைய ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் பிரவேசிக்கிறார். ஆகவே சிலருக்கு ஆன்மீக ரீதியான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வர்த்தக தொடர்பில் இருப்பவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வீடு, வாகனங்கள் போன்றவை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.  

மீனம்

மீன ராசியின் ஆறாம் வீட்டுக்கு செவ்வாய் பிரவேசிக்கிறார். ஆகவே இந்த நேரத்தில் எல்லா விஷயங்களிலும் சாதகமான முடிவுகள் வரும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வேலை நிமித்தமான பயணத்திற்கு வாய்ப்புள்ளது. தைரியம், தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கும். சமுதாயத்தில் மரியாதையும் மதிப்பும் கூடும். 

Latest Videos

click me!