வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் தடையில்லாமல் பூரணமாக இருப்பதற்கு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் வாஸ்து சாஸ்திரத்தில் பல தகவல்களை சொல்லி இருக்கிறார்கள். அதனை பின்பற்றும்போது வீட்டில் துன்பங்கள் குறைந்து மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். சிலருக்கு என்னதான் உழைத்தாலும் வீட்டில் பணமே சேராது. குடும்பத்திலும் அமைதி இருக்காது. இதற்கு வாஸ்துவும் ஒரு காரணம். நீங்கள் வாஸ்து விஷயங்களில் கவனமாக செயல்பட்டால் இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும். இந்தப் பதிவில் பீரோவை எந்த திசையில் வைப்பது வீட்டிற்கு செல்வத்தையும் மகிழ்ச்சியும் கொண்டுவரும் என காணலாம்.
24
Locker Direction as per Vastu
பணம், நகைகள் மட்டுமின்றி முக்கியமான ஆவணங்களையும் பீரோ அல்லது லாக்கரில் தான் சேமிக்கிறோம். இதனை சரியான திசையில் வைக்கும் போது, நிதி வளர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். பணம் வற்றாமல் நீண்டகாலம் இருக்கும் என வாஸ்து சொல்கிறது. அதற்கு தென்மேற்கு திசைதான் ஏற்றது. இதுவே பூமியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
34
Locker Placement Vastu
தென்மேற்கு மண்டலம் நிலைத்தன்மை, பாதுகாப்பின் அடையாளம். உங்களுடைய லாக்கர் அல்லது பீரோவை வைக்க அந்த திசையில்தான் வைக்க வேண்டும். இது நங்கூரம் போல மதிப்புமிக்க பொருளை தக்க வைக்கும் அற்புத திசையாகும். இதைத் தவிர்த்து வடகிழக்கு மாதிரியான திசையில் பீரோவை வைத்தால் வருமானம் குறையும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். பலருக்கும் வீட்டுக்கு வரும் பணம் வந்த வழி தெரியாமல் போகக் காரணமே பீரோவின் தவறான திசை அமைப்புதான்.
உங்களுடைய பீரோ அல்லது லாக்கருக்கும் சுவருக்கும் இடையில் சின்னதாக ஒரு இடைவெளி விடுவது நல்லது. இது லாக்கரை சுற்றி ஆற்றல் நிலவ அனுமதிக்கும். செல்வமும் பெருகும். நிதி எப்போதும் பெருகும். பற்றாக்குறை ஏற்படாது.