தனிமையில் நாள்களை கழிப்பவர்கள், அன்பான துணையைத் தேடுபவர்கள் சிவலிங்கத்திற்கு ரோஜாப் பூ அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த பூவை அன்பின் அடையாளமாக கண்ணில் ஒத்தி முத்தமிட வேண்டும் அல்லது ஒன்றாக வைத்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
காதல் வாழ்க்கையில் மன அழுத்தம், டென்ஷன் இருந்தால் சிவப்பு துணியில் சந்தனம், சிவப்பு ரோஜா, குங்குமம் ஆகியவை கொண்டு கட்டிக்கொள்ளுங்கள். இதனை வீட்டின் பூஜை அறையில் வைக்கவும். இதில் ஒரு சிவப்பு ரோஜாவை உங்கள் துணையிடம் கொடுத்தால் சச்சரவுகள் நீங்கும். இது உறவுகளில் கசப்பை முடிவுக்குக் கொண்டுவருகிறது.