பூஜை அறையில் உடைந்த கடவுள் சிலைகள் இருந்தால் அதை வீட்டில் வைக்க வேண்டாம். மேலும் வீட்டில் பெரிய கடவுள் சிலைகளை வைத்திருப்பதும் அசுபமாக கருதப்படுகிறது. சிலைகளுக்குப் பதிலாக வீட்டில் புகைப்படங்களை வைத்திருப்பது நல்லது. உடைந்த அல்லது சேதமடைந்த புகைப்படங்களாக இருந்தாலோ, சிதலமடைந்த சிலைகள் இருந்தாலோ அவற்றை நீர் நிலைகளுக்குச் சென்று தீப ஆராதனை காட்டி அவற்றை நீர் நிலைகளில் விட்டு விடுங்கள் அல்லது கோவில்களில் இந்த சிலைகளை வைத்து விடுங்கள்.
பிற பொருட்கள்
சமையலறையில் உள்ள காலாவதியான மளிகைப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், மருந்துப் பொருட்களை அகற்றி விடுங்கள். உடைந்த பைகள், பயன்படுத்தப்படாத துணிகள், உடைந்த மரச்சாமான்கள், பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்கள், உடைந்த அலங்காரப் பொருட்கள், பழைய ஆவணங்கள், பேப்பர்கள், பத்திரிகைகள், பயன்படாத காகிதங்கள், தேவையற்ற ரசீதுகள், காய்ந்து போன மலர்கள், உடைந்த விளக்குகள் போன்ற அனைத்தையும் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். தீபாவளி என்பது ஒளி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் பண்டிகை. இந்த பண்டிகையை முழு உற்சாகத்துடன் கொண்டாட, வீட்டை சுத்தமாகவும், ஒளிமயமாகவும் மாற்றுவது அவசியம்.
வீட்டை சுத்தம் செய்தல், அலங்கரித்தல், பூஜை அறைகளை தயார் செய்தல், தேவையற்றப் பொருட்களை அகற்றுதல், காலாவதியான பொருட்கள், உடைந்த பொருட்களை அகற்றுவது நேர்மறை ஆற்றல்களை பரப்ப உதவும். இத்தகைய செயல்களை செய்வதன் மூலம் தீபாவளி தினத்தன்று லட்சுமிதேவி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)