தஞ்சை மட்டுமல்லாது பல்வேறு மாநிலம் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருவுடையாருக்கு விபூதி, பால், சந்தனம், தயிர், மஞ்சள், திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.