மகா சிவராத்திரி அன்று வரும் சனிப் பிரதோஷம்.. இப்படி வழிபட்டால் ஈசன் இரட்டிப்பு பலன்களை வாரி வழங்குவார்

First Published Feb 18, 2023, 10:57 AM IST

sani pradosham 2023: சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷத்தை மகா பிரதோஷம் என அழைப்பர். அன்றைய நாளில் சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும் கூட விசேஷ பூஜைகள் செய்யப்படும்.  

நம்முடைய பாவம் நீக்கியருளும் சனி பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அதனால் பல நன்மைகள் கிடைக்கும். சிவபெருமானுக்கு பிறகு நந்திதேவருக்கும் பூஜைகள் நடைபெறும். இன்று சனி பிரதோஷம். சிவராத்தி தினத்தன்று வந்ததால் கூடுதல் சிறப்பு. இன்றைக்கு நடைபெறும் அபிஷேகத்தை தரிசித்தால், பாவமெல்லாம் கரையும் என ஆன்மீகம் அறிந்த பெரியோர் சொல்கின்றனர். மாசி மாதத்தில் வரும் இந்த சனி பிரதோஷம் விசேஷமானது. இன்று திருவோணம், சிவராத்திரி ஆகியவை கொண்டாடப்படுவது முக்கிய காரணம்.

சனி பிரதோஷ காலம்...

பிரதி மாதம் வரும் வளர்பிறை, தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி நாள்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை இருக்கும் காலம் பிரதோஷ காலம் என அழைக்கப்படுகிறது. பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு ஏற்ற காலம். இதில் சிவனை வழிபட்டால் எல்லா வகையான பாக்கியமும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த தின வழிபாடு நமக்கு பாவம் போக்கி, தோஷங்களை விலக்கி அருள் கிடைக்க செய்யும். சிவனுக்கு இன்றைய தினம் பிரதோஷ காலத்தில் வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் கிடைக்கும். 

சனி பிரதோஷம் தான, தர்மம் செய்ய உகந்த நாளாகக் கருதப்படுகிறது. உங்களுடைய சிறு தானம் கூட மலையளவு பலன்களை பெற்று தரும். இரட்டிப்பு பலன்களை வாரி வழங்கும் சனி பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்து பலனடையுங்கள்.  பிரதோஷம் அன்று அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு போய், சிறப்பு அபிஷேகத்தை தரிசனம் செய்யுங்கள்.  

பிரதோஷ வழிபாடு 

சனியன்று வந்த இன்றைய பிரதோஷத்தை மகா பிரதோஷம் என சொல்வார்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் சிறப்பான வழிபாடு நடக்கும். இதில் 16 வகையான அபிஷேகப் பொருட்களால் ஆராதனை செய்வர். 

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: எப்போது கண் விழிக்க வேண்டும்? விரத ஆரம்பம் முதல் நிறைவு வரை முழுவிவரம்..!

பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் நடக்கும் அபிஷேகம் தனிச்சிறப்பு. இந்த பிரதோஷ அபிஷேகத்துக்கு, நீங்கள் பொருட்கள் வாங்கி வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியத்தை அடையலாம் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: சிவ பூஜையில் ஒருபோதும் இந்த 5 பொருட்களை வைக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

click me!