அகத்தியருக்குத் திருமணக் காட்சி அளித்த நாகப்பட்டினம் திருஅகத்தியன்பள்ளி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்!

Published : Jan 27, 2026, 03:08 PM IST

Agastya marriage vision in Nagapattinam : கைலாயத்தில் சிவபெருமான்-பார்வதி திருமணம் நடந்தபோது, உலகைச் சமன் செய்யத் தெற்கே வந்த அகத்தியருக்கு, அவர் வேண்டியபடி இத்தலத்தில் இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி அளித்தார்.

PREV
16
திருஅகத்தியன்பள்ளி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

Agastya Marriage vision in Nagapattinam : சிவபெருமான் பார்வதி அம்மையாரும் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்த திருத்தலம். அகத்தியர் இந்த கோயிலை உருவாக்கியதால் கோயிலுக்கு அகத்தீஸ்வரர் கோயில் என்று கூறப்படுகிறது. எமதர்மன் வழிபட்ட சிவன் கோயில் இதுதான் என்ற பெருமையும் இந்த கோயிலுக்கு உண்டு கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
நாகப்பட்டினம் திருஅகத்தியன்பள்ளி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகில் அகத்தியான்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம். மூலவர் அகத்தீஸ்வரர், அம்பாள் மங்கை நாயகி. பழமையான சிவன் கோயில் என்று கூறப்படுகிறது. சிவன் லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றார் அகத்தியரால் உருவாக்கப்பட்ட கோயிலுக்கு அகத்தீஸ்வரர் என்று சிவபெருமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

36
திருஅகத்தியன்பள்ளி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். 

46
திருமணக் கோலத்தை காட்டி அருள் புரிந்த ஈசன்

அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வந்தார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி அகத்தியான்பள்ளியில் பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை காட்டி அருள் புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.

56
ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலின் அமைப்பு:

மூன்று நிலை இராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் ஸ்ரீ அகதீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியும் இறைவி மங்கைநாயகி சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிறபமாக காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.

66
ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் பலன்கள்:

இத்திருத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் தீராத நோய் கூட தீரும் என்று கூறப்படுகிறது. இங்கிருக்கும் அகத்தியரை நாம் தரிசித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு இறைவன் மற்றும் இறைவி திருமண கோலத்தில் காட்சியளித்ததால் திருமணத்தில் ஏதேனும் தடை இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடாமல் இருப்பவர்களுக்கு கூட திருமணம் விரைவில் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories