Thiruvidaikkazhi Murugan Temple Specialities Remedy : முருகப்பெருமான் தவம் செய்த திருவிடைக்கழி தலத்தின் ரகசியம் தெரியுமா? திருமணத் தடை நீக்கும் பரிகாரங்கள் மற்றும் குரவ மரத்தடி முருகனின் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
முருகப்பெருமாள் அசுரனின் தம்பியை வதம் செய்ததால் ஏற்பட்ட சாபத்தினால் இத்திருத்தலத்திற்கு வந்து தன் தன் தகப்பனிடம் தவம் இருந்து சாபம் நீங்கிய இத்திருத்தலத்திற்கு திருவிடைக்கழி என்று பெயர் பட்டது இக்கோயிலின் முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
26
திருவிடைக்கழி முருகன் திருக்கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரைத் தரிசித்தால் பாவம் நீங்கும். முதல் மனைவியை நிச்சயத்த திருத்தலமும் இதுதான் என்று கூறப்படுகிறது அதன் பிறகு திருப்பரங்குன்றத்தில் வைத்து திருமணம் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆம், முருகப் பெருமானுக்கு முதலில் நிச்சயம் நடந்த தலம் தான் திருவிடைக்கழி. அதன் பிறகு தான் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன் மற்றும் தெய்வானைக்கும் திருமணம் நடந்துள்ளது. இதில் தெய்வானை தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனான இந்திரனின் மகள். சூரசம்ஹாரத்திற்கு பிறகு முருகன் மற்றும் தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
36
கோயிலின் வரலாறு:
சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்குப் பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் ஒளிந்தான். சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்குப் பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குராமரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் ‘திருக்குராவடி’ என இத்தலத்திற்குப் பெயர் வந்தது. இவரைத் தரிசித்தால் பாவம் நீங்கும். முருகனின் உருவ சிலை: இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்தி லும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும்.
46
நிச்சயதார்த்த தலம்
முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது.
56
பலன்கள்:
கோயிலில் முருகன் சிவனின் லிங்க சிலையில் தவமிருந்து தோஷம் நீங்கியதால் நமக்கு ஏற்பட்ட தோஷத்திற்கு கோயிலுக்கு வந்து சென்றால் தோஷம் விலகும் என்றும் கூறப்படுகிறது திருமண தடை இருப்பவர்களுக்கு இக்கோயிலுக்கு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மாணவர்கள் இக்கோயிலுக்கு வந்தால் அறிவு கல்வியில் மேன்மை செல்வம் பெருகும் என்றும் கூறப்படுகிறது
66
கோவிலின் அமைப்பு:
அழகான ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றனர்.சுப்பிரமணியக் கடவுள் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயருமுண்டு. தெய்வினைக்குத் தனிச் சந்நிதி உள்ளது தவக்கோல தரிசனம்.சேந்தனார் முத்தி பெற்ற தலம்.திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகன் தலம்.கோயிலுள் நுழைந்தால், முன்பண்டபத்தில் திருப்புகழ், வேல் விருத்தம் முதலியவை பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன.தல மரமாகிய குராமரம் தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது மனம்சாந்தத்தை அருளுகின்றது.