வீட்டில் அக்னி மூலை சரியாக இருந்தால் தான் பண புழக்கம் நன்றாக இருக்கும். இல்லையென்றால் பண வரவு தடைபடும். கடன் அதிகரிக்கும். அதனால் உங்களுக்கு பணப்பிரச்சனை இருந்தால் தென்கிழக்கு திசையை கவனித்து பாருங்கள். தென்கிழக்கு என்றால் ஆக்னேயம் அதாவது அக்னி மூலை என்பார்கள். பாவங்களை அழிக்கும் ரொம்ப புனிதமான திசை. இந்த திசையில் தான் யாகங்கள், ஹோமங்கள் வளர்ப்பார்கள்.
25
அக்னியில் இரண்டு தேவிகள் இருப்பார்கள். ஒரு தேவிக்கு ஸ்வாஹா எனவும், மற்றொரு தேவிக்கு ஸ்வதா எனவும் பெயர். தென்கிழக்கில் சமையலறையை வைத்தால் நல்லது என்பார்கள் வாஸ்து நிபுணர்கள். மின்சாதனங்களை கூட வைக்கலாம். ஆனால் இந்த திசையில் பெட் ரூம் வைக்க கூடாது.
35
மழைநீர், கழிவுநீர் போன்றவை தென்கிழக்கில் தேங்கி நிற்கக் கூடாது. தென்கிழக்கு திசையில் குப்பை தொட்டி வைக்கக் கூடாது. தென்கிழக்கில் பள்ளம், குளம் கழிவுநீர் வாய்க்கால் ஆகியவை இருக்கும் வீட்டில் சுப காரியம் தடைபடும்.
45
இந்த தென்கிழக்கு மண்டலம் சுருக்கப்படவோ அல்லது நீட்டிக்கப்படவோ கூடாது. இதையெல்லாம் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். பணக்கஷ்டம் சரியாகிவிடும்.
தென்கிழக்கு திசை சரியாக இல்லாமல் கழிவுகள், கழிவு நீர் தேங்கி இருந்தால் வீண் வழக்குகளில் கூட சிக்கி அலைகழியலாம். நீலம், மஞ்சள் அல்லது கருப்பு நிறம் இருக்கக்கூடாது. இந்த திசையில் சாய்வு மாதிரியான அமைப்பு இருக்கக்கூடாது. இந்த எளிய வாஸ்து குறிப்புகளை பின்பற்றி பலன் பெறுங்கள்.