ராமபிரான் பூஜித்த ரங்கநாதன்! ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் அரங்கரின் அரிய தல வரலாறு, சிறப்புகள்!

Published : Jan 26, 2026, 06:13 PM IST

Biggest temple in India Srirangam : தமிழகத்தின் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வரலாறு, 21 கோபுரங்களின் ரகசியம் மற்றும் ராமானுஜரின் திருமேனி குறித்த வரலாறு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

PREV
15
ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் அரங்கரின் அரிய தல வரலாறு

Biggest temple in India Srirangam : 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது. மற்றும் இக்கோயில் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுகிறது. 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய இயங்கும் இந்து கோவிலும் இதுதான். 21 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் மற்றும் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் மூலவர் அரங்கநாதர் இக்கோயிலின் சிறப்பம்சங்கள். ஏழு அதிசயங்களும் இக்கோயில் தான் இருக்கின்றன. இக்கோயிலின் வரலாறு சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி

ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி மற்றும் உன்னிடம் ஆற்றுக்கு இடையே அமைந்துள்ள ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி சுயமாக தோன்றியதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பிரியாவிலேயே மிகப்பெரிய கோயில்களில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்.இந்திய கோயில்களிலேயே மிக உயரமான கோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் கோயில் தான்.வைகுண்டத்தில் இருப்பது போலவே காட்சி தரும் பெருமாள் இந்த ஸ்ரீரங்க கோயிலில் உள்ளார்.

35
ரங்கநாதர் கோவில் வந்த புராண கதை:

விபீஷணனுக்கு செல்லும் வழியில் அன்றைய தினத்திற்கான பூஜைக்கு நேரமாகி விட்டதால், சிறுவன் ரூபத்தில் வந்த விநாயகரிடம் அந்த சிலையை வைத்திருக்கும் படி சொல்லி விட்டு, காவிரியில் நீராட சென்று விட்டான் விபீஷணன். ஆனால் விபீஷணன் வர நேரமானதால், அந்த சிலையை ஆற்றங்கரையிலேயேவைத்து விட்டு மறைந்தார் விநாயகர். கரையில் வைக்கப்பட்டதும் சிலை பெரிதாக மாறியதால் குழப்பமடைந்த விபீஷணன், அந்த சிலையை அங்கிருந்து இலங்கை கொண்டு செல்ல எவ்வளவு முயன்றும் முடியவில்லை.

45
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோயில்

இதனால் அழுது, கலங்கிய விபீஷணனிடம் தான் காவிரி ஆற்றங்கரையிலேயே இருக்க விரும்புவதாக அசரீரியாக வந்து சொல்லிய நாராயணன், விபீஷணனுக்கு இலங்கை இருக்கும் தென் திசை நோக்கி பார்த்தவாறு வீற்றிருப்பதாகவும் வாக்களித்தார். இப்பகுதியை ஆண்டு தர்ம வர்ம சோழன் தான் ரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பினான். பிறகு ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த கோயில் ஆற்று மணலில் புதைந்தது. பிறகு கிளிச்சோழன் என்ற மன்னன் மண்ணில் புதைந்த கோயிலை மீட்டு, சீரமைத்தான்.ஆழ்வார்கள் அனைவராலும் பாடப்பட்ட இந்த தலத்தில், ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், அரங்கன் சேவைக்கே தன்னை அர்ப்பணித்து, அவரோடு ஐக்கியமானாள். இதை போல் டில்லி சுல்தானின் மகளும் பெருமாள் மீது கொண்ட பக்தியால் அவரோடு ஐக்கியமானதாகவும், இவரே துலுக்க நாச்சியாராக அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

55
கோவிலின் சிறப்பு அம்சம்:

விஷ்ணு பெருமாள் தனது பக்தர்களுக்கு ஆதிசேஷ வடிவில்‌ சுருண்ட பாம்பின் மீது படுத்துக்கொண்டு ரங்கநாதராக காட்சி தருகிறார். இந்த விஷ்ணு சிலையின் தனிச்சிறப்பு என்னவென்றால், வழக்கமாக பிரம்மாவின் தொப்புளில் இருந்து எழும் தாமரை காணவில்லை. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பிரம்மா விஷ்ணுவை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது. விஷ்ணு பெருமாள் பரலோகத்தில் இருந்துகொண்டு அண்டத்தில் உள்ள அனைத்தையும் பாதுகாக்கின்றார். ரங்கநாத சுவாமி – “பெரியபெருமாள், நம் பெருமாள், அழகிய மணவாளன்“ என்ற பெயர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.கம்பர் தான் இயற்றிய கம்பராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததும் இங்கு தான். இந்த கோயிலை ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு, பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் அறிவித்துள்ளது. 120-வது வயதில் (கிபி 1137) ஸ்ரீராமானுஜர் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இக்கோயிலில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories