வாலி மற்றும் வாலி குடும்ப வம்சத்தினர் கோடம்பாக்கம் சிவன் கோயிலில் பரம்பரை பரம்பரையாக வழிபட்டதாக கூறப்படுகிறது யாருக்கும் தெரியாத கோடம்பாக்கத்தில் இப்படி ஒரு சிவன் கோயிலா என்று அதிசயத்தில் உள்ளனர் இதன் வரலாறை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை கோடம்பாக்கத்தில் புலியூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பழமையான சிவாலயம், பாரத்வாஜ முனிவரால் வழிபடப்பட்ட அருள்மிகு பாரத்வாஜேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயில் வாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்லவர் காலத்தில் சோழர்களால் மேம்படுத்தப்பட்ட சிறப்புடையது. இறைவன் பெயர் பாரத்வாஜேஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் இறைவி பெயர் சொர்ணாம்பிகை.