History of Bannari Amman in Tamil : சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய பண்ணாரி மாரியம்மனின் முழு தல வரலாறு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பண்ணாரி அம்மன் ஆலயம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இது தமிழகம் மற்றும் கர்நாட எல்லையில் இருக்கும் வனப்பகுதி என்பதால், இரு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கும் பிரியமான தெய்வமாக பண்ணாரி அம்மன் திகழ்கிறார். அம்மன் சுயமாக உருவாகியுள்ளார். குறிப்பாக இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது.
26
பண்ணாரி அம்மனின் வரலாறு:
இந்த கிராம மக்கள் தங்கள் மாடுகளை மேய்க்க இந்தக் காட்டுக்கு வருவது வழக்கம். அதில் ஒரு பசு மாட்டை அந்த பசுவின் சொந்தக்காரர் மாலையில் பால் கறக்க முற்பட்டபோது அதன் மடியில் பால் இல்லாததைக் கண்டார். தினமும் இப்படி நடக்கவே ஒரு நாள் மறைந்திருந்து மாட்டைக் கவனிக்கத் தொடங்கினார்.அந்தப் பசு ஒரு புதர் அருகே சென்று தன் மடியில் இருந்த பால் முழுவதையும் தானாக சுரந்துவிட்டு வருவதைக் கண்டார். உடனே அந்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும், அதனருகே ஒரு லிங்கமும் இருக்கக் கண்டார்.
36
மலைவாழ் மக்களின் காவல் தெய்வம் பண்ணாரி அம்மன்
அதை அவர் ஊர் மக்களிடம் சென்று கூற, ஊர் மக்கள் யாவரும் அந்த அதிசயத்தைக் காண வந்தனர். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள் வந்து தன்னை பண்ணாரி மாரியம்மனாய் கொண்டாடுமாறு அருள் வாக்கு கூற மக்களும் அவ்வாறே செய்தனர்.கிராம மக்கள் அதே இடத்தில் பச்சிலையால் பந்தல் அமைத்து அம்மனை வழிபடத் தொடங்கினர். பின்பு ஓலை கொண்டு கூரை வேய்ந்து அம்பிகையை வழிபட்டு வந்தார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து ஓடுகளால் ஆன கூரை அமைத்து பின் கோபுரத்துடன் கூடிய அம்பிகையின் கோவில் கட்டப்பட்டது.
46
கோயிலின் அமைப்பு:
தாமரை பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி அம்மனின் கையில் கத்தி கபாலம் டமாரம் கலசம் ஆகியவை உள்ளது சார்ந்த நிலையில் முகம் இருக்கிறது பிரகாரத்தில் மாதேஸ்வரமூர்த்தி தெப்ப கிணற்று அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர்.
56
திருவிழா:
பண்ணாரி அம்மன் கோயிலில் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது இதில் குறிப்பாக பங்குனி மாதம் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு வீதியில் உலா வரவைப்பட்டு அக்னி சட்டி ஏந்தும் மற்றும் தீமிதி திருவிழாவும் நடைபெற்று வருகிறது இது பார்ப்பதற்கு மிக சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
66
கண் வியாதிக்கும் அம்மை போடுதல் தீர்த்தம்:
காட்டில் அதிகாரியாக பணியாற்றிய ஆங்கிலேயர் துப்பாக்கியால் பண்ணாரி அம்மன் கோயில் சுவற்றில் குறி வைத்து சுட்டார் அதன் பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. கண் தெரியாமல் போனது தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒழி மீண்டும் அவருக்கு கிடைத்தது. கண் வியாதி உள்ளவர்களுக்கு இந்த தீர்க்கவும் வழங்கப்பட்டு வருகிறது இதனால் கண்பார்வையில் ஏதேனும் பிரச்சனை ஒலி தெரியாமல் இருப்பது ஆகிய தீர்ந்து வருகின்றன. அம்மை போடுதல் தீர்த்தம் இங்கு கொடுக்கப்படுகிறது .