ஆன்மிக ரகசியம்: கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரணுமா? இந்த ஒரு பரிகாரம் போதும்!

Published : Nov 10, 2025, 11:08 AM ISTUpdated : Nov 10, 2025, 11:10 AM IST

கொடுத்த பணம் திரும்ப வராததால் ஏற்படும் மன வருத்தத்திற்கு, ஒரு எளிய ஆன்மீக பரிகாரம் உள்ளது. 11 கோமதி சக்கரங்களை அரசமரத்தடியில் புதைத்து, பணம் தர வேண்டியவரை நினைத்து வழிபட்டால், தடைப்பட்ட பணம் மீண்டும் நம்மை வந்து சேரும் என நம்பப்படுகிறது.

PREV
15
கொடுத்த பணத்தை திரும்ப வரழழைக்கும் வழிபாடு

நமக்குள் பலருக்கும் இது போன்ற அனுபவம் இருக்கும் — மனம் தாளாமல், ஒருவரின் அவசர நிலை கண்டு உதவிய மனநிலையிலே பணத்தை கொடுத்துவிடுகிறோம். ஆனால் காலம் கடந்தபின், அந்த பணம் திரும்ப வராதபோது மனதில் வருத்தமும், ஏமாற்றமும் ஏற்படும். சில சமயங்களில் கேட்டவர்கள் உண்மையிலேயே தர முடியாத நிலையிலும், சிலர் தர விரும்பாத மனநிலையிலும் இருப்பார்கள். அந்த நேரங்களில் நம் மனம் தளராமல், ஆன்மீக வழியில் ஒரு எளிய பரிகாரத்தை செய்தால், கொடுத்த பணம் மீண்டும் நம்மை நாடி வருவதாக நம்பப்படுகிறது.

25
இந்த பரிகாரம் எந்த வித சடங்கோ, பெரிய செலவோ அல்ல

இந்த பரிகாரம் எந்த வித சடங்கோ, பெரிய செலவோ அல்ல — ஆன்ம நம்பிக்கையுடன், அமைதியாக செய்ய வேண்டிய ஒரு சிறிய வழிமுறைதான். இதற்கு “கோமதி சக்கரம்” எனப்படும் புனிதக் கல்லை பயன்படுத்த வேண்டும். 11 கோமதி சக்கரங்களை வாங்கி, கங்கை நீரில் அல்லது தூய நீரில் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, சுபமுகூர்த்த நாளில் அல்லது உங்களுக்கு நல்ல நாளாக உணரப்படும் ஒரு நாளில், காலை 10 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

35
உதவி செய்யும் கோமதி சக்கரம்

அரசமரம் இருக்கும் ஒரு புனித இடத்திற்குச் செல்லுங்கள். மரத்தடியில் சற்றே ஆழமான பள்ளத்தை தோண்டி, ஒவ்வொரு கோமதி சக்கரத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக அதில் வையுங்கள். வைக்கும் ஒவ்வொரு முறையும், உங்களுக்கு பணம் திருப்பி தர வேண்டிய நபரின் பெயரை மனதில் நினைத்து, அவர் விரைவில் பணத்தை திருப்பி தரட்டும் என்று உள்ளம் கனிந்தே வேண்டிக்கொள்ளுங்கள். 11 கோமதி சக்கரங்களையும் இதே முறையில் வைத்து, மண்ணை மூடி, அந்த இடத்தை வணங்கி வீடு திரும்பலாம்.

45
நம் நியாயமான பணம் நம்மைத் தேடி வரும்

இந்த பரிகாரத்தை யாருக்கும் தெரியாமல், முழு நம்பிக்கையோடு ஒரே ஒருமுறை செய்தால் போதுமானது என்று ஆன்மீக நம்பிக்கை கூறுகிறது. இதன் மூலம் தடைப்பட்டிருந்த பணப்பிரவாகம் மீண்டும் இயங்கத் தொடங்கும். நம் நியாயமான பணம் நம்மைத் தேடி வரும். இது வெறும் சடங்கல்ல, நம் நம்பிக்கை, மனஅமைதி, கர்ம பலன் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு வழி. உதவிய மனம் கொண்டவர்களுக்கு தெய்வம் தாமே நியாயத்தைச் செய்திடும் என்ற நம்பிக்கையில் இதனைச் செய்வது முக்கியம்.

55
கொடுத்த பணம் மீண்டும் நம்மை வந்து சேரும்

தேவையானது: 11 கோமதி சக்கரம்

இடம்: அரசமரம் அடியில்

நேரம்: காலை 10 மணிக்குள்

முறை: பணம் திருப்பி தர வேண்டிய நபரின் பெயரை நினைத்து ஒவ்வொரு சக்கரத்தையும் வைக்க வேண்டும்

நன்மை: கொடுத்த பணம் மீண்டும் நம்மை வந்து சேரும்

நம்பிக்கை உடைய இதயம் கொண்டவர்களுக்கு இது நிச்சயமாக பலன் தரும் பரிகாரம் என சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories