Sivanmalai Aandavar Temple: முருகனுக்காக 25 ஆண்டுகளாக மலையேறி தீர்த்தம் சுமந்த காளை உயிரிழப்பு.! கண்ணீரில் பக்தர்கள்.!

Published : Nov 07, 2025, 01:51 PM IST

sivanmalai aandavar temple Periya kaalai: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன் மலை கோயிலில் இறைவனுக்கு சேவை செய்து வந்த காளை உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
சிவன்மலை ஆறுதொழுவு தீர்த்த காவடி பெரிய காளை உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன் மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த திருத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்ட பெருமை கொண்ட கோயில் ஆகும். இங்கு மூலவராக சுப்ரமணியர் வள்ளியுடன் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். 

வள்ளி மலைக்குச் சென்று வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் வள்ளியுடன் இங்கு வந்து குடி கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் உள்ள சிறப்பு உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் மகிழ்ச்சிகளை இந்த பெட்டி முன்னமே உணர்த்துவதாக கூறப்படுகிறது.

சிவன் மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை பெட்டியில் வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். அந்தப் பொருளை வைப்பதற்கு சுவாமியிடம் உத்தரவு கேட்கப்படும் உத்தரவானவுடன் அந்த பொருள் அந்தப் பெட்டியில் வைக்கப்படும். இன்னொரு பக்தரின் கனவில் அடுத்த பொருள் சுட்டிக்காட்டும் வரை பழைய பொருளே அந்த பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த கோவிலில் குழந்தை பாக்கியம், திருமண தடை, தொழிலில் இருக்கும் பிரச்சனைகள், குடும்ப நோய்கள், உடல் ஆரோக்கியம் என அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் இடமாக கருதப்படுகிறது.

இந்தக் கோவிலில் உத்தரவு பெட்டி எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு பெரிய காளையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் அல்லது சடங்குகளில் ஒரு சிறப்பு வாய்ந்த பெரிய காளையை பயன்படுத்துவது அல்லது அதனை கவனிப்பது தொன்மையான மரபாக கருதப்பட்டு வருகிறது. சிவன்மலை ஆண்டவர் தீர்த்த காவடி குழு ஆறு தொழுவு காவடி பெரிய காளையானது 25 வருடங்களாக இறைவனுக்கு சேவை செய்து வந்தது.

இந்த காளையிடம் பொதுமக்கள் மற்றும் காவடி குழுவினர் வைக்கும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறி வந்தது. எனவே இந்த காளையை தெய்வமாகவே பக்தர்கள் பாவித்து வந்தனர். சிவன் மலை ஆண்டவர் கோவிலில் நடக்கும் அனைத்து திருவிழாக்களிலும் காளைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய காளை இரவு 11:05 மணியளவில் முக்தி அடைந்தது. காளையின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பூஜைகள் முடிந்த பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு ஊத்துக்காடு தோட்டம் அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகே காளை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த காளைக்கு ஒரு வருடத்திற்கு பின்னர் கோவில் கட்டி சிவன்மலை ஆண்டவராக வழிபாடு செய்வதற்கு காவடி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories