Margazhi: மார்கழியில் இத்தனை விழாக்களா? சுப முகூர்த்த, வாஸ்து நாட்கள் மற்றும் விரத நாட்கள் பட்டியல் இதோ.!

Published : Dec 16, 2025, 06:48 AM IST

மார்கழி மாதம் 2025, டிசம்பர் 16 முதல் ஜனவரி 14, 2026 வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆன்மிக  மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற முக்கிய விழாக்கள்,பல்வேறு விரத நாட்களின் முழுமையான பட்டியலை இந்த கட்டுரை வழங்குகிறது. 

PREV
13
மார்கழி 2025 — ஆன்மிக ரீதியாக சிறப்பான மாதம்

மார்கழி இறைவழிபாட்டுக்கு உகந்த காலம் என்பதால், அதன் விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. நாம் மறக்காமல் அந்த விரதங்களை மேற்கொள்ள அது  உதவியாக இருக்கும். மார்கழி மாதம் ஹிந்து பெருமாள் வழிபாட்டிலும், புண்ணிய விரதங்களிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மார்கழி மாதம் 2025–26 இல் 16 டிசம்பர் 2025 அன்று துவங்கி 14 ஜனவரி 2026 வரை தொடரும். இந்த மாதம் முழுவதும் பக்தி, பிரார்த்தனை, விரதங்கள் மற்றும் விசேஷ நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. அதன் பட்டியலை இப்போது பார்ப்போம்.

23
முக்கிய விழாக்கள் & நிகழ்ச்சிகள்

மார்கழி மாதத்தில் பல முக்கிய தெய்வ விழாக்கள் மற்றும் ஆன்மிக செயல்கள் இடம்பெறும்

விழாக்கள் பட்டியல்

  • அனுமன் ஜெயந்தி – டிசம்பர் 19, மார்கழி 4
  • கிறிஸ்துமஸ் பண்டிகை – டிசம்பர் 25, மார்கழி 10
  • வைகுண்ட ஏகாதசி – டிசம்பர் 30, மார்கழி 15
  • ஆங்கில புத்தாண்டு – ஜனவரி 1, மார்கழி 17
  • ஆருத்ரா தரிசனம் – ஜனவரி 3, மார்கழி 19
  • போகிப் பண்டிகை (மாத இறுதி) – ஜனவரி 14, மார்கழி 30
33
விரத நாட்கள் (Vratham Days)

மார்கழி மாதத்தில் பக்தர்கள் பல விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள்:

விரதங்கள் பட்டியல் 

  • அமாவாசை - மார்கழி 4 (டிசம்பர் 19) 
  • பௌர்ணமி - மார்கழி 19 (ஜனவரி 3) 
  • கிருத்திகை விரதம் மார்கழி 16 (டிசம்பர் 31) 
  • திருவோணம் மார்கழி 8 (டிசம்பர் 23 )
  • ஏகாதசி மார்கழி 15 & 30, டிசம்பர் 30 & ஜனவரி 14 
  • சஷ்டி விரதம் மார்கழி 10 & 25, டிசம்பர் 25 & ஜனவரி 9 
  • சங்கடஹர சதுர்த்தி மார்கழி 22 (ஜனவரி 6) 
  • சிவ ராத்திரி மார்கழி 3 (டிசம்பர் 18)

இவை அனைத்தும் பக்தர் வாழ்கையில் ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன.

சுப முகூர்த்த & வாஸ்து நாட்கள்

ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டில் நிகழ்ச்சி நடத்த, திருமணம் திட்டமிட, தொழில் தொடங்க மாதத்திலுள்ள நேரங்களை அறிந்து கொள்ள விரும்புவர். இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் சுப முகூர்த்த நாட்கள் மற்றும் வாஸ்து நாட்கள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனாலும் விரதங்கள் மற்றும் விழாக்கள் தான் முக்கியமாக கருதப்படுகின்றன. அதனால் பக்தித் திட்டங்களில் முன்னுரிமை பெறுகிறது

மார்கழி மாதம் ஆன்மிக வளர்ச்சி, பக்தி மற்றும் விரதம் நம்பிக்கையினால் நிறைந்த மாதமாகும். இவ்விடத்தில் நிகழும் விழாக்கள் மற்றும் விரதங்கள் உங்கள் ஆன்மிக பயணத்தை மேலும் மகத்தாக்கும். இந்த மாதத்தை முழுமையாக உபயோகித்து ஆன்மிக ஆனந்தத்தை பெறுங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories