நல்ல கல்வி கற்று, அதற்கேற்ற நல்ல வேலை மற்றும் சம்பளம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகவே உள்ளது. ஆனால் சிலருக்கு படிப்பும் திறமையும் இருந்தாலும், வேலைவாய்ப்பில் தொடர்ந்து தடைகள், தாமதங்கள் ஏற்பட்டு மன உளைச்சலை சந்திக்க நேரிடுகிறது. ஜோதிட ரீதியாகப் பார்த்தால், ஒருவரின் ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் வலுவாக இருக்க வேண்டும்.
குறிப்பாக புதன் (அறிவு, கல்வி), சனி (உழைப்பு, நிலைத்தன்மை), சுக்கிரன் (சௌகரியம், வேலை வாய்ப்பு) மற்றும் ராகு (நவீனத் துறை, தொழில்நுட்பம்) ஆகிய நான்கு கிரகங்களும் பலமாக இருந்து, உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டிருந்தால், படிக்கும் காலத்திலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.