New year 2023: இந்த பொருளை பாக்கெட்ல போட்டுக்கோங்க... புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெருகும்!

Published : Dec 31, 2022, 05:31 PM IST

சமையலறையில் சில மசாலா பொருள்கள் இந்த புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்றால் நம்ப முடிகிறதா? அது பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ.   

PREV
16
New year 2023: இந்த பொருளை பாக்கெட்ல போட்டுக்கோங்க... புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெருகும்!

புத்தாண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. எல்லா மக்களும் இந்த வருடத்தின் பழைய நிகழ்வுகளை மறந்து மகிழ்ச்சியுடன் புத்தாண்டில் நுழைய தயாராகிவிட்டார்கள். வரும் ஆண்டு மகிழ்ச்சியை கொண்டு வரும் என அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அந்த நம்பிக்கையை மெய்ப்பிக்க சமையலறையில் உள்ள சில மசாலாப் பொருட்கள் உதவுகின்றன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அவை குறித்து இங்கு காணலாம். 

இதையும் படிங்க; வெறும் 25 நிமிடங்களில் கேரட் கேக் ஆரோக்கியமான புத்தாண்டு ரெசிபிகள் இதோ!

26

கிராம்பு

 

கிராம்பு

மசாலா டீ தொடங்கி பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இந்து மதத்தில் சடங்கு செயல்பாடுகளில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது இது திருஷ்டி விழுவதை தடுத்து கெட்ட விளைவுகளை குறைக்கிறது. நல்ல விஷயங்கள் நடக்க காரணமாக உள்ளது. உங்கள் வீட்டில் பணம் புழங்கும் இடங்களில் கிராம்பை வைத்தாலும், துர்கா தேவியை வழிபடும் தாலியில் வைத்தாலும் அதிர்ஷ்டம் கிடைக்குமாம். வணிகரீதியாக வெளியே புறப்படும்போது கிராம்பை மென்றுவிட்டு செல்லலாம். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்க கிராம்பினை சட்டைப்பையில் போட்டுக் கொள்ளவும். 

 

36
Beware of the danger of too much turmeric..

மஞ்சள்

மஞ்சள் இருள் அகற்றி ஒளி தரும் என இந்து மதம் கூறுகிறது. மங்களத்தின் அடையாளமாகவே மஞ்சள் கருதப்படுகிறது. தடைகளை அகற்றி நல்ல விஷயங்களை செய்வதற்கு மஞ்சளை வைத்து கொள்ளுங்கள். குரு பகவானுக்கு உகந்தது மஞ்சள். இதற்கு தீய பார்வையை நீக்கும் சக்தியுள்ளது. தினமும் உணவில் அல்லது குளிக்கும் நீரில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது நல்லது. அவசியமான வேலைக்குப் போகும் முன் மஞ்சளை திலகமாக இட்டுக் கொள்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

46

ஏலக்காய்

தற்போது பார்க்கும் வேலை பிடிக்கவில்லையா? வேறு வேலை மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா? உங்களுக்கு ஏலக்காய் ஏற்றது. இரவில் தூங்கும் முன் தலையணைக்கு அடியில் சில ஏலக்காய் விதைகளை வைத்து விட்டு உறங்குங்கள். இதனால் தொழிலில் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். இனிப்பு மற்றும் அசைவ உணவு தயாரிப்பில் வாசனைக்காக இது சேர்க்கப்படுகிறது. அதை விடவும் உங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்த உதவுகிறது என்பதே சிறப்பு. எல்லா முயற்சிகளும் சாதகமாகவும், பணத்தையும் நிம்மதியையும் பெறவும் ஏலக்காயை வைத்து கொள்ளுங்கள். 

56

இலவங்கப்பட்டை 

இலவங்கப்பட்டையை கையோடு எடுத்துச் செல்லும் எல்லோருக்குமே அதிர்ஷ்டத்தை தரும். செல்வ செழிப்போடு வாழ இந்த மசாலா பொருள்தான் உதவும். இலவங்கப்பட்டையை பணப்பையில் வைத்திருப்பது நிதியை ஈர்க்கவும், அதனை பெருக்கவும் உதவும் என வானியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.

66

பிரியாணி இலை 

கனவுகளை நினைவாக்கும் வல்லமை பிரியாணி இலைக்கு உண்டு என ஞான நூல் பயின்ற நிபுணர்கள் கூறுகின்றனர். பேனாவால் உங்கள் கனவுகளையும், ஆசைகளையும் இந்த இலையில் எழுதி அதை முழுவதுமாக எரிப்பதன் மூலம் கனவுகள் நனவாகும் என்று நம்பப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருள்களௌ உள்ளுடன் வைத்து கொள்ளுங்கள். புத்தாண்டில் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டட்டும். 

இதையும் படிங்க; Star anise: நலம் தரும் நட்சத்திர சோம்பு.. பாலியல் வாழ்க்கையின் ப்ளஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories