90'ஸ் கிட்ஸுக்கு கெட்டி மேளச்சத்தம் கேட்கும்.. புஷ்பராகம் அணியுங்கள்!

First Published | Dec 30, 2022, 4:21 PM IST

எந்த விஷயத்தை மேற்கொண்டாலும் குரு பலமும், குரு பார்வையும் அவசியமாக கருதப்படுகிறது. குரு பகவானின் அருளை பெற புஷ்பராகம் அணிந்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 

ஒருவரின் ராசிக்கும், கிரகணத்திற்கும் ஏற்ற வகையில் ஜோதிட சாஸ்திரம் வெவ்வேறு வகையான கற்களை பரிந்துரைக்கிறது. இது மாதிரியான ரத்தின கற்களை பயன்படுத்தும் போது நன்மையை கொடுக்கும் என பரவலான நம்பிக்கை இருக்கிறது. நடுவிரலில் நீலம், மோதிர விரலில் வைரக்கல் என ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு வகையான கற்கள் பரிந்துரைக்கப்படுகிறது. நவரத்தின கற்களை அணிந்து கொள்ளும் முன்பாக ஜாதகத்தை ஒருமுறை பார்த்து கொள்ளவேண்டும். 

சூரிய கிரகத்திற்கு மாணிக்கம், சந்திர கிரகத்திற்கு முத்து, சனிக்கு நீலம் உள்ளிட்ட கற்கள் வரிசையில் புஷ்பராகம் எனும் மஞ்சள் ரத்தின கல்லை (Yelllow Sapphire) யார் அணியலாம். என்னென்ன பயன்கள் என்பதை இங்கு காணலாம். மஞ்சள் ரத்தின கற்களிலேயே பல வகைகள் உள்ளன. மஞ்சள் நிறத்திலேயே சற்று வேறுபாட்டுடன் இவை கிடைக்கின்றன. நிறமற்ற வகையினை வெள்ளை ரத்தினக்கல் என அழைக்கின்றனர். இதில் பொன்மஞ்சள் நிற கற்கள் பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது. இதனை அணிவதால் கம்பீரமான தோற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

Tap to resize

இந்திய ஜோதிடத்தின்படி, புஷ்பராகம் எனும் மஞ்சள் ரத்தினக் கல் குரு பகவானுடையது. இதை அணிபவர்களுக்கு செல்வம், ஞானம், ஆன்மீகத்தில் மேம்பாடு ஏற்படுகிறது. வியாழன் கிரகம் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குகிறது. 

யார் அணியலாம்? 

புஷ்பராக கல்லை யார் வேண்டுமானாலும் அணியலாம். இது நிதி வளர்ச்சியை மேம்படுத்தும். உடல்நல பிரச்சனைகளிலிருந்து மீள உதவுகிறது. குரு பகவானுக்கு தான் நவகிரணங்களில் முதன்மையான இடம். கனக புஷ்பராக கல் மீனம் ராசிக்காரர்கள் அணியலாம். வியாழன் திசையை கொண்டுள்ளவர்களும் இதை அணியலாம். தனுசு ராசியினரும் கனக புஷ்பராகம் அணிந்து கொள்ளலாம். 3,12,21 ஆகிய தேதியில் மண்ணுலகிற்கு வந்தவர்கள் இதை அணியலாம். 

எப்போது வாங்கலாம்? 

வியாழன் கிழமை அன்று காலையில் புஷ்பராக கல்லை வாங்க கடைக்கு செல்லலாம். ராகு காலத்தில் செல்ல வேண்டாம். உடல் எடைக்கு ஏற்றவாறு கல்லின் எடையை முடிவு செய்யுங்கள். வலது கை மோதிர விரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிந்து கொள்வது நல்லது. மோதிரத்தை வாங்கிய பின்னர் வியாழன் என்று பூஜைகள் மேற்கொண்டு அணிந்து கொள்ளலாம். 

என்னென்ன பயன்கள்? 

புஷ்பராகம் அணிவதால் விபத்து மூலம் ஏற்படும் மரணத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். திருமண தடை நீங்குகிறது. புஷ்பராகம் கையில் அணியும் பெண்களுக்கு அன்புள்ள, அக்கறையான கணவர் கிடைக்கிறார்கள். கோபத்தை குறைக்கிறது. சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும், பதற்றமின்றியும் வாழ்க்கையை தொடர உதவுகிறது. குரு பகவானுக்கு ஏற்ற கல் என்பதால் தொழிலில் முன்னேற்றம் காண உதவுகிறது. 

இதையும் படிங்க; ஒரே வாரத்தில் கொரியப் பெண்களை போல முகம் பொலிவு பெறும்... சிம்பிள் டிப்ஸ்! 

Latest Videos

click me!