முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான சிவபெருமான் பல பெயர்களாக போற்றி பாடப்பட்டிருக்கிறார். பக்தர்கள் நடராஜராகவும், சிவலிங்கமாகவும், ருத்ராட்சமாகவும் சிவபெருமானை வழிபடுகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிவன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலிலும் அந்தத் தலத்துக்கே உரிய ஒரு சிறப்புப் பெயரால் சிவபெருமான் போற்றப்படுகிறார். குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்தம்பேஷ்வர மகாதேவர் கோவிலில் அருள் பாலிக்கும் சிவனை தரிசனம் செய்ய நாட்டின் பல இடங்களிலிருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.
இந்தக் கோயில் பக்தர்களையும் ஆன்மிக சுற்றுலா செல்பவர்களையும் ஈர்ப்பதற்கு முக்கியக் காரணம் இந்தக் கோயிலில் உள்ள 4 அடி உயர சிவலிங்கம் தினமும் இரண்டு முறை கடலில் மூழ்கி எழுவதுதான். வேறு எங்கும் நிகழாத இந்த இயற்கை அற்புதம் இந்தக் கோயிலில் நடப்பதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இந்தக் கோயிலை அலங்கரித்துக்கொண்டே இருக்கிறது.
கந்த புராணக் கதையில் இந்தக் கோயில் பற்றிக் கூறப்படுகிறது. சிவபெருமான் தனது மகன் கார்த்திகேயனை ஆறு நாட்கள் தேவர் படையின் தலைவனாக நியமித்தார். அந்த சமயத்தில் அரக்கர்களின் அட்டூழியம் அதிகமானது. தாரகாசுரன் என்ற அரக்கன் முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். தேவர்களின் படைத்தலைவனாகிய கார்த்திகேயன் அந்த அரக்கர்கனை அழித்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார்.
ஆனால், தாரகாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்ட கார்த்திகேயன் அவனைக் கொன்றதற்காக மனம் வருந்தினார். அப்போது கார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய விஷ்ணு, தாரகாசுரனைக் கொன்ற இடத்தில் ஒரு சிவன் கோயிலைக் கட்டுமாறு கூறியிருக்கிறார். அதன்படியே கார்த்திகேயன் சிவன் கோயில் கட்டினான். அந்தக் கோயில்தான் ஸ்தம்பேஷ்வர மகாதேவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.