Lamp Lighting Rituals: வீட்டில் விளக்கு ஏற்றுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அது பாசிட்டிவ் எனர்ஜியை தரும் ஒரு விஷயம். மாலையில் விளக்கு ஏற்றும்போது செய்யும் சின்ன தவறுகள் கூட தோஷத்தை ஏற்படுத்தலாம்.
தினமும் வீட்டில் பக்தியுடன் தீபம் ஏற்றுவதால், மகாலட்சுமி அருள் புரிவார். இதனால் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, வருமான வழிகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து, வீட்டில் செல்வமும் தானியமும் பெருகும் என்பது நம்பிக்கை.
25
வாஸ்து தோஷத்திற்கு விளக்கே மருந்து
வாஸ்து சாஸ்திரத்தின்படி, தினமும் காலையிலும் மாலையிலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது வாஸ்து தோஷத்தின் தாக்கத்தை அழிக்கும். குறிப்பாக, மாலையில் கடவுளுக்கு முன்பு இரண்டு விளக்குகளை ஏற்றுவது ரொம்பவே மங்களகரமானது. இதில் ஒன்று நெய் விளக்காகவும், மற்றொன்று எண்ணெய் விளக்காகவும் இருக்க வேண்டும்.
35
நெய், எண்ணெய் விளக்குகளை வைக்கும் முறை
விளக்குகளை வைக்கும் முறையில் அறிவியலும் சாஸ்திரமும் அடங்கியுள்ளது.
நெய் விளக்கு (Ghee Lamp): கடவுளின் படம் அல்லது சிலைக்கு வலது பக்கம் நெய் விளக்கை வைக்க வேண்டும். இதை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி ஏற்றுவதால், வீட்டில் அமைதியும் அதிர்ஷ்டமும் பெருகும்.
எண்ணெய் விளக்கு (Oil Lamp): கடவுளின் படத்திற்கு இடது பக்கம் எண்ணெய் விளக்கை (நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்) வைக்க வேண்டும். இது வீட்டிற்கு ஒரு ரக்ஷா கவசம் போல செயல்படும். நெகட்டிவ் எனர்ஜி, கண் திருஷ்டி, வாஸ்து தோஷங்களை நீக்க இது உதவும்.
விளக்கு ஏற்றுவதில் திசைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு:
கிழக்கு: குடும்ப உறுப்பினர்களின் ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நன்மைக்காக விளக்கு கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.
வடக்கு: செல்வம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக விளக்கு வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். கவனத்திற்கு: விளக்கை ஒருபோதும் மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கி ஏற்றக்கூடாது, இது அசுபமாக கருதப்படுகிறது.
55
விசேஷ நாட்களில் எத்தனை விளக்கு?
சாதாரண நாட்களில் மாலையில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது நல்லது. ஆனால் அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி அல்லது மற்ற விசேஷ பண்டிகை நாட்களில், கடவுளுக்கு முன்பு ஐந்து அல்லது ஏழு விளக்குகளை ஏற்றுவது மிகவும் மங்களகரமானது. இப்படி செய்வதால் வீட்டிற்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என பண்டிதர்கள் கூறுகின்றனர்.