வரவிருக்கும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவரின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் மற்றும் எளிய பரிகாரங்களை இப்போது பார்ப்போம்.
பாத்ர மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். இதனால், இந்த நாள் இந்துக்களுக்கு மிகவும் புனிதமானதாகும். கிருஷ்ண ஜெயந்தி விழா வழிாட்டு முறைகள் மற்றும் விரதங்கள் கண்ணனின் அருளை உடனே கிடைக்கவைக்கும் ஒரு சிறப்பான வழியாகும். ஒரு சில முறைகளில் கிருஷ்ணரை வழிபட்டால் நினைத்தகாரியம் நடக்கும். பொன் பொருள் குவியும்.
25
குங்குமப்பூ கலந்த பாயாசம்
ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜெயந்தி அன்று கோபாலனுக்கு குங்குமப்பூ கலந்த பாயாசம் செய்து படையுங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, மாலையில் பூஜை செய்த பின் உணவு உண்ணுங்கள். வீட்டில் அசைவ உணவு சமைக்க வேண்டாம்.
35
தொட்டிலில் வைத்து தாலாட்டுங்கள்
வீட்டில் சிறிய கிருஷ்ணர் தொட்டில் இருந்தால், அவரை அதில் வைத்து ஆட்டுங்கள். துளசி மாலை அணிவியுங்கள். காய்ச்சாத பாலில் ரோஜா அல்லது தாமரை இதழ்கள், பன்னீர், வெள்ளை சந்தனம், சிறிது கற்பூரம் கலந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யுங்கள். இதையும் கிளிக் செய்யுங்கள்- நெட்டிவ் எனர்ஜியை விரட்டும் கல் உப்பு.!