நம்ம விநாயகர் தான்.. ஜப்பான்ல அதிர்ஷ்ட தெய்வமாம்..இந்திய தெய்வங்களையே வேறு பெயரில் வணங்கும் ஜப்பானியர்கள்..

First Published | Feb 21, 2023, 2:00 PM IST

நம் நாட்டு இந்து கடவுள்களுக்கும், ஜப்பானிய தெய்வங்களுக்கும் ஒற்றுமை உள்ளது. 

சரஸ்வதியும், பென்சாய்டன் 

இந்தியாவில் சரஸ்வதி தேவியை அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்து சமயம் மட்டுமில்லாமல் அனைவரும் அறிந்துள்ள சரஸ்வதி தேவியை போலவே, ஜப்பானில் உள்ள தெய்வம் தான் பென்சாய்டன். இசை, ஞானம், அறிவுக்கூர்மை, பேச்சு போன்றவற்றை அருளும் தெய்வமாக ஜப்பானில் பென்சாய்டன் கருதப்படுகிறார். 

எமனும், என்மாவும் 

இந்து சமயத்தில் நரகத்தில் உள்ள தலைவன் தான் எமன். மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கு எமன் என்றாலே அச்சம் மேலிடும். இவர் நம் பாவங்களை கவனித்து கொண்டிருப்பார் என நம்பப்படுகிறது. இதை போலவே ஜப்பான் நம்பிக்கையில் உள்ள தெய்வம் தான் என்மா. 

Tap to resize

இந்திரன், தாய்ஷாகுதீன் 

இந்தியாவில் உள்ள இந்திரன் என்ற தெய்வத்திற்கும், ஜப்பானின் தாய்ஷாகுதீனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் யானையை தான் தங்கள் வாகனமாக கொண்டுள்ளனர். இந்திரனுக்கான வழிபாடு இந்தியாவில் வழக்கொழிந்து போனாலும், தாய்ஷாகுதீனுக்கு ஜப்பானில் பல கோயில்கள் உள்ளன. 

விநாயகரும், கன்கிடன்

இந்தியாவில் பல மக்களால் வழிபடப்படும் விநாயகனுக்கு யானை தலை இருப்பது போலவே, ஜப்பானில் உள்ள கன்கிதிடனும் யானை முகத்தோனாகவே அறியப்படுகிறார். மேலும், இவர் செல்வ செழிப்பான வாழ்க்கையும், கஷ்டம் தீர்ப்பவராகவும் வெற்றி தருபவராக, அதிர்ஷ்டம் அருளும் கடவுளாக ஜப்பான் மக்களால் அறியப்படுகிறார் தெரியுமா? நம்மூரில் கூட விநாயகனே வினைத் தீர்பவனே என்றுதான் கூறுகிறோம். அடடா! என்னா ஒற்றுமை! 

லட்சுமியும், கிச்சிஜோதீன் 

இந்தியாவில் லெட்சுமி தேவி எவ்வளவு மகிமை வாய்ந்தவராக கருதப்படுகிறாரோ, அப்படி ஜப்பானில் கிச்சிஜோதீன் கருதப்படுகிறார். இருவரும் கருத்தரித்தல், அழகுக்கு தெய்வங்களாக வணங்கப்படுகின்றனர். 

இதையும் படிங்க: நீங்கள் ஒருமுறை போனால் போதும், எல்லா பிரச்சனையும் தீரும்.. சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள் பற்றி தெரியுமா?

கருடா.. கருரா.. 

இந்து நம்பிக்கையில் உள்ள கருடாவை போல, ஜப்பானில் நெருப்பு உமிழும் பறவையாக கருரா கருதப்படுகிறது. இவை டிராகன்களுக்கு உணவளிக்கின்றன. 

இதையும் படிங்க: சாமி ஆடுறவங்க சொல்லும் அருள் வாக்கு நிஜமா பலிக்குமா? அது உண்மையா? பின்னணி என்ன?

Latest Videos

click me!