Sani Peyarchi Palan 2023: சனி பகவான் ஆசிர்வாதத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்!

Published : Jun 13, 2023, 07:51 PM IST

இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை சனி பகவான் வக்ரமடைவார். இதனால்  6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சனி பகவான்வக்கிர திடீரென பெரிய மாற்றங்களை கொண்டு வருவர்.

PREV
17
Sani Peyarchi Palan 2023: சனி பகவான் ஆசிர்வாதத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்!

சனீஸ்வரன் என்பவர் நவக்கிரகங்களில் ஒருவராவார். இவர் ஒரு ராசியில் 2 அரை ஆண்டு காலம் தங்குவார். அதில் ஒரு ஆண்டில் மட்டும் 4 மாத காலம் வரை வக்ரம் அடைவார். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை சனி பகவான் வக்ரமடைவார். இதனால் யாரெல்லாம் சனி பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த ஆண்டு நன்மைகள் கிடைக்கும். அதுபோலவே யாரெல்லாம் நன்மைகள் அனுபவித்தார்களோ அவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். அதன்படி சனி பகவானின் வக்கிர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அது என்னென்ன மாற்றங்கள் என்பதை குறித்து இங்கு காணலாம்.
 

27

துலாம்: 
இந்த ராசியின் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அவர்களது கடன் பிரச்சனைகள் நீங்கும். இந்த சமயத்தில் வேலை இல்லாதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். இவர்களது கையில் அதிகம் பணப்புழக்கம் வரும். திருமணம் ஆகாமல் இருந்தோருக்கு இந்நாளில் கண்டிப்பாக திருமணம் நடக்கும்.

37

விருச்சிகம்: 
சனி வக்கிரம் அடைவதால் உங்களது முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் உங்களது வாழ்வில் அதிர்ஷ்டங்கள் திடீரென்று வந்து சேரும். குறிப்பாக வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கையில் பணம் வரவு அதிகம் கிடைக்கும்.

47

தனுசு: 
இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். இவர்களுக்கு பணம் அதிகம் கிடைப்பதால் வீண் செலவு அதிகமாக செய்வார்கள். இவர்கள் புது முயற்சியில் ஈடுபட்டால் இவர்களது வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

57

மகரம்: 
இந்த ராசிக்காரர்களுக்கு சொத்து பிரச்சினை தீரும். இவர்களது வீடு தேடி பணம் வரும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த ராசிக்காரர்களின் சுப காரியங்கள் நடைபெறும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.

67

கும்பம்: 
இந்த நாளில் இவர்களது வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய வேலை கிடைக்கும். உறவினர்களிடையே கருத்து வேறுபாடு நீங்கும். மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். 

இதையும் படிங்க: அனைவருக்கும் தெரியும் படி இந்த ஒரு பொருளை வைத்தால் போதும்.. வீட்டிற்குள் எதிர்மறை சக்தி நுழையவே முடியாது..

77

மீனம்: 
வேலை இல்லாமல் இருக்கும் மீன ராசிக்காரர்களே கவலைப்படாதீங்க இந்த நாளில் உங்களுக்கு வேலை கிடைக்கும். இதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்கும், குறிப்பாக உங்களது கடன் தீரும்.

Read more Photos on
click me!

Recommended Stories