Sani Bhagavan Temples in India : சனி பகவானின் இந்த 5 பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும், சனி பகவானின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தமிழ்நாட்டில் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ளது தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் தனி சன்னதியில் உள்ள சனி பகவான் 'தென்னாட்டு சனி பகவான் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் நவக்கிரக யாத்திரையின் ஒரு பகுதியாகும். குறிப்பாக சனிக்கிழமைகளில் சனி பகவானை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு சென்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
25
சனி தோஷம் நீக்கும் எட்டியத்தளி ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் உள்ள எட்டியத்தளி என்ற ஊரில் உள்ள கோயில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில். இத்தல இறைவி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக நவக்கிரகத்தில் இடது புறம் ராகு பகவானும், வலது புறம் கேது பகவானு இடம் பெற்றிருப்பார்கள். ஆனால், இத்தலத்தில் சிறப்பம்சமாக சனி பகவானுக்கு இடது புறம் கேது பகவானும் வலது புறம் ராகு பகவானும் இடம் பெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்களும் சரி, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சரி இங்கு வந்து வழிபாடு செய்யலாம்.
35
கோகிலா வன ஸ்தலம்
மதுரா அருகே அமைந்துள்ள கோகிலா வன ஸ்தலம் சனி பகவானின் முக்கிய யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். புராணங்களின் படி, சனி பகவான் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. இது ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
45
சனி சிங்கனாப்பூர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் நாட்டின் மிகவும் பிரபலமான சனி பகவான் கோயிலாகும். இங்கு சனி பகவானின் சிலை திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால், இங்குள்ள வீடுகளுக்குக் கதவுகளே இல்லை. ஏனெனில் சனி பகவான் இங்குள்ள மக்களைக் காப்பாற்றுகிறார் என்று நம்பப்படுகிறது.
55
சனி பகவான் கோயில்
மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் அருகே அமைந்துள்ள சனி பகவான் கோயில் வரலாற்று மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மையமாகும். இங்கு வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் சனி பகவான் நிறைவேற்றுவதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு பஜனைகள் நடத்தப்படுகின்றன.