Temple: கடன் தொல்லையால் கஷ்டப்படுகிறீர்களா? நீங்கள் மறக்காமல் செல்ல வேண்டிய 5 கோவில்கள் இதுதான்.!

Published : Aug 21, 2025, 03:27 PM IST

தமிழகத்தில் கடன் பிரச்சனையை தீர்க்க உதவும் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் புராண முக்கியத்துவம் மற்றும் ஆன்மீக சக்தி பெற்ற சில பிரசித்தி பெற்ற தலங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முக்கியமான தமிழக கோயில்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
1.திருச்சேறை ருண விமோசன லிங்கேஸ்வரர் ஆலயம்

கும்பகோணத்திற்கு அருகில் திருச்சேறை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ‘ருண விமோசன லிங்கேஸ்வரர் கோயில்’ ‘ருண விமோசனம்’ என்றால் ‘கடன்களில் இருந்து விடுதலை’ என்று பொருள். இந்தக் கோயில் கடன் நிவாரணத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பிரதான தெய்வமாக சார பரமேஸ்வரர் மற்றும் ஞானவல்லி அம்மன் அருள் பாலிக்கின்றனர். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்வது பக்தர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றம் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இங்கு தாரித்திரிய தகன சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யப்படுவது கடன்களை அகற்ற உதவும் என கூறப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலுக்கு பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் மூலமாக எளிதில் செல்லலாம். காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

25
2. தியாகராஜ சுவாமி ஆலயம், திருவாரூர்

திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோயிலில் ருண விமோசன லிங்கேஸ்வரர் தனி சன்னிதியில் வணங்கப்படுகிறார். இந்த லிங்கேஸ்வரர் திருச்சேறையில் தனிக்கோயில் கொண்டுள்ள நிலையில் தியாகராஜ ஸ்வாமி கோயிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார். இவரை வழிபடுவது கடன் தொல்லைகளை போக்குவதாகவும், இங்கு வழிபட்டால் நிதி ஸ்திரத்தன்மை மேம்படுவதோடு, மன அமைதியும் அளிக்கும் என கூறப்படுகிறது. பக்தர்கள் இங்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து தங்கள் கடன்களில் இருந்து விடுதலை பெற வேண்டி பிராத்தனை செய்கின்றனர். குறிப்பாக மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்களில் இந்த லிங்கேஸ்வரரை வழிபடுவது மிகவும் சிறப்பு. திருவாரூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோயிலை எளிதில் அடையலாம். கோயில் காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும்.

35
3. திருநாகேஸ்வரம் ஆலயம்

கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் கோயில். ராகு கிரகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட நவகிரக கோவில்களில் ஒன்றாகும். ராகு தோஷத்தால் ஏற்படும் நிதி இழப்பு, வேலை வாய்ப்பு பிரச்சனைகள் மற்றும் கடன் தொல்லைகளை நீக்குவதற்கு இங்கு வழிபடுவது பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது. ராகு காலத்தில் இங்கு ராகுவுக்கு பால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். இந்த கோயிலில் ராகு பகவான் சிவபெருமான் அருளால் தனது தோஷங்களை போக்கிக் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் இங்கு வணங்குவது ராகு தோஷத்தை அகற்றவும், ராகு தோஷத்தால் ஏற்படும் பண பிரச்சனைகளை தீர்க்கவும் உதவும் என நம்பப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளது. காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். 

45
4.மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்

தமிழ் கலாச்சாரத்தின் மையமாக விளங்கி வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்வத்தையும், நிதி ஸ்திரத்தன்மையும் அளிக்கும் திருத்தலமாக நம்பப்படுகிறது. இங்கு அன்னை மீனாட்சி மகாலட்சுமியின் அம்சமாக வழிபடப்படுகிறார். மீனாட்சி அம்மனை வணங்குவது பக்தர்களுக்கு கடனில் இருந்து நிவாரணம் தருவதாக நம்பப்படுகிறது. மேலும் அன்னை மீனாட்சி பக்தர்களுக்கு செல்வ செழிப்பை வழங்குவார் என்பது நம்பிக்கை. இங்கு மகாலட்சுமி அர்ச்சனை மற்றும் தாமரை மலர்களால் செய்யப்படும் பூஜைகள் நல்ல பலன்களைத் தரும். சித்ரா பௌர்ணமி மற்றும் நவ ராத்திரி திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மனை வழங்குவது சிறப்பு. பாண்டிய நாட்டுப் பேரரசியாக இருந்த அன்னை மீனாட்சி தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு குறைவில்லாத செல்வத்தை வழங்குவார் என்பது ஐதீகம். மதுரை ரயில் நிலையம் விமான நிலையம் மூலம் கோவிலை எளிதாக அடையலாம். காலை 5:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் திறந்திருக்கும்.

55
5.ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்

சென்னை ரத்னகிரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குபேரர் கோவிலில் வழிபடுபவர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். செல்வத்தின் கடவுளான குபேரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் நிதி செழிப்பு மற்றும் கடன் நிவாரணத்திற்காக வணங்கப்படுகிறது. குபேரர் மகாலட்சுமி உடன் இணைந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். குபேர எந்திர பூஜை, மகாலட்சுமி அர்ச்சனை மற்றும் தங்க நாணயங்களை வைத்து செய்யப்படும் சிறப்பு பூஜைகள் இந்த மிகவும் பிரபலம். வெள்ளிக்கிழமைகளில் இங்கு வணங்குவது விசேஷமாக கருதப்படுகிறது. சென்னையில் உள்ள இந்த கோயிலுக்கு, உள்ளூர் பேருந்துகள், வாடகை வாகனங்கள் மூலமாக செல்லலாம். காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

மேற்கூறப்பட்ட திருக்கோயில்கள் தமிழகத்தின் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலங்கள் ஆகும். இவை கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை பெற உதவுவதாக பக்தர்களால் நம்பப்படும் கோயில்களாகும். மனத்தூய்மையுடன் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வழிபடுவது மன அமைதியும், நிதி முன்னேற்றத்தையும் அளிக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த திருத்தலங்களுக்கு ஒரு முறையாவது சென்று வழிபட்டு வாருங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories