
சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கியமாக கருதப்படுவது 18 படிகள் தான் அதை ஏறினால் தான் மூலவர் ஐயப்பனை காண முடியும் இந்த 18 படிக்குப்பின் என்ன மர்மம் நிறைந்திருக்கிறது ஏன் 18 படி ஐயப்பன் க்கு உள்ளது அதை ஏறினால் தான் ஐயப்பனை பார்க்க முடியும் என்பது காரணம் என்ன இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்று முழுமையாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
18 படி ரசியம்:
கார்த்திகை மாதம் மாலை அணிந்து, நேர்த்தியாக விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் 18 படிகள் ஏறி தரிசனம் செய்வார்கள். சபரிமலையில் நடைபெறும் படி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 18 என்ற எண்ணுக்கு எப்போதும் வரலாற்று சிறப்பு உண்டு. சபரி மலையைச் சுற்றியுள்ள மலைகள் 18 தான்.
கருப்பு:
கருப்பசாமிக்கும், சபரிமலை ஐயப்பனுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கின்றது. அது என்னவென்றால் இவர்கள் இருவர்களையும் காண்பதற்கு 18 படிகள் ஏறியே செல்ல வேண்டும். கருப்பசாமி ஐயப்பனுக்கு ஒரு காவல் தெய்வம் ஆக இருந்து வருகிறார். அதனால் கருப்பசாமியையும் 18 படி ஏறி சென்றாலே அவரை தரிசிக்க முடியும். இருவர்களும் நண்பர்கள் என்பதால் ஐயப்பனின் படி பூஜையில் கண்டிப்பாக கருப்பசாமியின் பங்கு இருக்கிறது.
அதாவது ஐயப்ப அவதாரத்தில் 12 வயது பாலகனாக ஐயப்பன் உள்ளதால் சிறு வயதினராக நடந்து வரும் ஐயப்பன் உயரமாக அமைந்திருக்கும் ஞான பீடத்தில் ஏறி அமர சிரமப்படக் கூடாது என்ற தெய்வீக எண்ணத்தில் அங்கு கூடியிருந்த தேவர் கூட்டத்தில் உள்ள 18 தேவதைகள் தரையில் இருந்து கோவில் பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசைவரிசையாகப் படுத்துக் கொண்டனர். ஐயப்பன் பதினெட்டுப் படிகளாகப் படுத்துள்ள தேவதைகள் மீது பாதம் வைத்து ஏறி வந்து ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக்கொண்டார். சபரிமலை ஐயப்பன் கோவிலையும், அங்குள்ள பதினெட்டு படிகளையும் பகவான் பரசுராமரே தனது திருக்கரங்களால் உருவாக்கியதாகக் கருதப்படுகிறது.
18 படி உருவான வரலாறு: ஐயப்ப சுவாமியின் அவதாரத்தில் 12 வயது பாலகனாக ஐயப்பன் உள்ளதால் சிறு வயதினராக நடந்து வரும் ஐயப்பன் உயரமாக அமைந்திருக்கும் ஞான பீடத்தில் ஏறி அமர சிரமப்படக் கூடாது என்ற தெய்வீக எண்ணத்தில் அங்கு கூடியிருந்த தேவர் கூட்டத்தில் உள்ள 18 தேவதைகள் தரையில் இருந்து கோவில் பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசைவரிசையாகப் படுத்துக் கொண்டனர். ஐயப்பன் பதினெட்டுப் படிகளாகப் படுத்துள்ள தேவதைகள் மீது பாதம் வைத்து ஏறி வந்து ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக்கொண்டார். சபரிமலை ஐயப்பன் கோவிலையும், அங்குள்ள பதினெட்டு படிகளையும் பகவான் பரசுராமரே தனது திருக்கரங்களால் உருவாக்கியதாகக் கருதப்படுகிறது.
18 படியின் தேவதைகள்:
ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதர், காளி, எமன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு(வியாழன்), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய 18 தேவதைகள் இருந்து அருள்வதாக சொல்லப்படுகிறது.
ஐயப்பனின் 18 படிகள் ஆன்மீகம் சார்ந்த மற்றும் ஒரு மனிதனின் முக்கிய உணர்வுகளைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இதன் முக்கிய ரகசியங்கள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
1. ஐந்து புலன்கள்
முதல் 5 படிகள் - மனிதனின் ஐம்புலன்களைக் குறிக்கின்றன. அவை: கண், காது,மூக்கு நாக்கு மற்றும் மெய் (தொடுதல்). இந்த புலன்களை அடக்கி ஆள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
2. எட்டு ராகங்கள்
அடுத்த 8 படிகள் மனிதனை நல்வழியிலிருந்து தடுக்கும் எட்டு தீய குணங்களைக் குறிக்கின்றன. அதாவது இன்பம், கோபம், பேராசை மோகம், செருக்கு, பொறாமை, அகந்தை வஞ்சகம்.
3. மூன்று குணங்கள் அடுத்த 3 படிகள் மனிதனின் இயல்புகளைக் குறிக்கின்றன சத்துவ குணம்: அமைதி மற்றும் தூய்மை. ரஜோ குணம்: அதீத ஆர்வம் மற்றும் செயல்பாடு. தமோ குணம்: சோம்பல் மற்றும் அறியாமை
4. வித்யை மற்றும் அவித்யை:
கடைசி 2 படிகள் 17 படி ஞானம் அல்லது அறிவு பற்றி கூறப்பட்டுள்ளது. 18 படி அறியாமை ஆகியவற்றைக் குறிக்கின்றன. அறியாமையை நீக்கி ஞானத்தைப் பெறுவதே இறைவனை அடைவதற்கான படிகள். தத்துவமசி: இந்தப் படிகளைக் கடந்து மேலே சென்றால், கருவறையில் "தத்துவமசி" என்ற வாசகத்தைக் காணலாம். "அதுவே நீயாக இருக்கிறாய்" என்பது இதன் பொருள். அதாவது, உனக்குள் இருக்கும் இறைவனை நீயே உணர வேண்டும் என்பதே இந்த சபரிமலை கோயில் தத்துவமாகும்.
இந்த 18 படிகளும் சபரிமலையைச் சுற்றியுள்ள 18 மலைகளைக் குறிப்பதாகவும், பதினெட்டு புராணங்கள், பதினெட்டுப் பரிகாரங்கள் போன்றவற்றையும் குறிப்பதாகக் கூறுவதுண்டு, இது மனித வாழ்வின் தவறுகளை நீக்கி முக்தியை அடைவதற்கான பாதையை உணர்த்துகிறது.