ஆதி முதல் அந்தம் வரை: காவிரி நதிக்கரையில் 5 ரங்கநாதர்கள்:மோட்சம் தரும் பஞ்சரங்க தலங்கள்!

Published : Jan 13, 2026, 08:12 PM IST

Pancha Ranga Kshetrams Lord Ranganatha Temples in Tamil : காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுரங்கம் மற்றும் அந்தரங்கம் ஆகிய 5 புனிதத் தலங்களின் வரலாறு மற்றும் வழிபாட்டு சிறப்புகள்

PREV
16
காவிரி நதிக்கரையில் 5 ரங்கநாதர்கள்

பஞ்சரங்க தலங்கள் என்பவை காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து பெருமாள் கோயில்கள் ஆகும், அவை ஆதிரங்கம் ஸ்ரீரங்கப்பட்டணம், மத்தியரங்கம் திருவரங்கம், அப்பாலரங்கம் திருப்பேர்நகர், சதுர்த்தரங்கம் சாரங்கபாணி கோயில், பஞ்சரங்கம் திரு இந்தளூர் ஆகியவையாகும். இந்தத் தலங்கள் அரங்கநாதப் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை, மேலும் இவை காவேரி நதியின் ஓட்டத்தின் படி அமைந்திருப்பதும், அவற்றின் சிறப்பு அம்சங்களும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

26
1. ஆதிரங்கம் (கர்நாடகா):

ஆதிரங்கம் என்பது வைணவ சமயத்தில் முக்கியமான பஞ்சரங்க திருத்தலங்களில் முதன்மையானதாகும். இது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணா என்ற ஊரைக் இந்தக் கோயில் அமைந்துள்ளது. மூலவர் இங்கு மகாவிஷ்ணு ஸ்ரீ ரங்கநாதராக, ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்து உறங்குவது போல் கோலத்தில் காட்சியளிக்கிறார். ஐந்து கோயில்களில் இதுவே முதல் கோவில் என்று கூறப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்குள்ள பெருமானை நோக்கி தவம் இயற்றியுள்ளார். அவருக்கு இத்தல பெருமாள், ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்து போல் திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார். கவுதம முனிவரின் வேண்டுகோள்படி, அவருக்கு காட்சியளித்த கோலத்திலேயே, இறைவன் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.

36
2.மத்தியரங்கம்:

தமிழ் நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஶ்ரீரங்கம் ஆகும். இது 'மத்தியரங்கம் ' என்றும் சிலர் அனந்த ரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம். 21 கோபுரங்களும், சுற்று பிரகாரங்களும் அமையப் பெற்ற சுயம்புத் தலம். பெருமாள் இங்கு புஜங்க சயனத் திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.

46
3.அப்பாலரங்கம்

திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் திருப்பேர் நகர் என்ற கோவிலடி அப்பால நாதர் கோயில். இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திர கிரி என்ற அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், இது பஞ்ச அரங்க தலங்களில் 'அப்பாலரங்கம்' என்று போற்றப்படுகிறது. இங்கு பெருமாள் மேற்கு நோக்கி புஜங்க சயனகோலத்தில் அருள்கிறார். இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க் கேண்டய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவக மன்னனுக்கு சாபம் போக்கிய தலம் இது.

56
4.சதுர்த்தரங்கம்

 காவிரி நதி, காவிரி, அரசலாறு என இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். இதுவே 'சதுர்த்தரங்கம்' என்று சிறப்பு பெற்றது. இது திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெருமாள் சன்னதி தேரின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் இரு புறங்களிலும் உத்தராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் உத்தான சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் வைதீக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம், சாரங்கம் எனும் வில் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். புரட்டாசி சனியில் பெருமாளை தரிசித்து அருள் பெறுவோம்.

66
5. பஞ்சரங்கம்:

காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது திரு இந்தளூர் திருத்தலம். பஞ்ச அரங்க தலங்களில் 'பஞ்சரங்கம்' அந்தரங்கம் என்று சொல்லப் படுகிறது. இங்கு அருளும் பரிமள ரங்கநாதர் இங்கு ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீர சயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.

பரிமள ரங்கநாதர் திருவடிகளில் எம தர்மராஜரும், அம்பரீஷ சக்கரவர்த்தியும் அமர்ந்து இரவும் பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றதால் இவ்வூர் 'திரு இந்தளூர் ' என்று பெயர் பெற்றது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories