Famous Temples around Madurai tourist guide : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைத் தவிர, மதுரையைச் சுற்றிலும் அமைந்துள்ள திருப்பரங்குன்றம், அழகர்கோவில், பழமுதிர்சோலை உள்ளிட்ட புகழ்மிக்க கோயில்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மதுரை என்றாலே பேமஸ் தான் எந்த இடத்திற்கும் எந்த சாப்பாடு உணவிற்கும் , பூவுக்கும் கூட மதுரை ஃபேமஸாக இருக்கும். ஆனால் மதுரையில் இத்தனை கோயில்கள் இருக்கும் என்று பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம் மதுரை என்றாலே திருவிழா என்று மற்றொரு பேரும் உண்டு. ஒவ்வொரு கோயில் திருவிழாவும் மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெறும் அது என்னவென்று ஒவ்வொரு கோயிலாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
1.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்:
மதுரையில் உள்ள கோயில்களில் முதன்மையானது மீனாட்சியம்மன் கோவிலே ஆகும். 1623 மற்றும் 1655 க்கு இடையில் கட்டப்பட்ட இந்த இடத்தின் அற்புதமான கட்டிடக்கலை உலகளவில் புகழ்பெற்றது. ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 பார்வையாளர்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இக்கோயிலில் உள்ள ஆயிராங்கால் மண்டபம், 30,000க்கும் மேற்பட்ட சிற்பங்கள், பொற்றாமரை குளம், பல்வேறு தெய்வங்களின் சன்னதிகள் என மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை முழுமையாக சுற்றிவர ஒரு நாள் கூட பத்தாது எனலாம். ஆனால் நீங்கள் 2 மணி நேரத்திற்குள் தரிசித்திவிட்டு வந்தால் தான் மீதமுள்ள கோவில்களுக்கு செல்லலாம். மதுரையை ஆளும் மீனாட்சி என்றும் இவருக்கு மற்றொரு பேரும் உண்டு. மிகவும் சிறப்பு மிக்கது சித்திரை திருவிழா தான் ஏனென்றால் மீனாட்சிக்கும் சுந்தருக்கும் கல்யாணம் நடைபெறுவதற்கு அந்த கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வருவதை மிக விமர்சையாக கொண்டாடப்படும்.
35
கள்ளழகர் கோயில்:
தமிழ்நாட்டின் மிகப் பெரிய பழமையான மலைகோவில். மதுரையில் இருந்து 21 கிமீ தொலைவில் உள்ள கள்ளழகர் கோயில் . சுந்தரபாகு பெருமாளின் முக்கிய உருவம் தவிர, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் போன்ற உருவங்களும் உள்ளன. சித்திரைத் திருவிழாவைக் கொண்டாடவும், கள்ளழகர் கடக்கும் முக்கிய நிகழ்வைக் காணவும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு கூடுகிறார்கள். வராரு வாராரு அழகர் வாராரு! மதுரையே ஆடும் என்பது இவருக்கு ஒரு சிறப்பாக அமைகிறது.
45
கூடல் அழகர் கோயில்:
கூடல் அழகர் கோயில் மீனாட்சி கோயிலில் இருந்து 1.5 கிமீ தொலைவில் பெரியாரில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பெருமாள் மிகவும் அழகியவர் என்பதாலே இதற்கு அழகர் கோவில் என்று பெயர் வந்ததாம். இங்கு மாசி மகத்தன்று 10 நாட்கள் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் பார்ப்பவர்களை உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் அழகிய கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது. மதுரையின் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று.
55
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் நீங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.. இங்கு தான் முருகப்பெருமான் இந்திரனின் மகளான தேவயானியை மணந்ததாக நம்பப்படுகிறது. இங்கு முருகப்பெருமான் திருமண கோலத்தில் காட்சி தருவதால் இங்கு திருமணம் செய்து கொள்ளுவது மிகவும் விசேஷம். புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான திருமணங்கள் இந்த கோவிலில் தான் நடைபெறுகின்றன.