உன் பக்தன் எனக்கு மட்டும் தங்களின் திருமணத்தை காண ஆவல் இருக்காதா என கேட்டு வருத்தப்பட, இறைவனின் திருமணக் காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார்.இந்த திருமணக் கோலத்தில் இருக்கும் சிவன் பார்வதியையும் முன் அகஸ்தியர் மற்றொரு சிவ லிங்கத்டை வைத்து பூஜித்து பேறு பெற்றார்.இந்த கல்யாணசுந்தரேஸ்வரர் சிவ லிங்கத்திற்கு பின் இன்றும் கல்யாணசுந்தரேஸ்வரர் - பார்வதி சிலையை காண முடியும்.
சுகப்பிரசவம் நடக்க வழிபட வேண்டிய கோயில்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோயிலில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும். ஜாதக ரீதியாக மக நட்சத்திரக்காரர்களுக்கு ஏதேனும் கிரக தோஷத்தால் பாதிப்பு இருந்தால் இந்த கோயிலில் வழிபாடு செய்யலாம்.
இங்கே அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்ததால் திருமணத்தில் தடை இருப்பவர்களும் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களும் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மக நட்சத்திரக்காரர்களுக்கு இது ஒரு சிறந்த கோயிலாக கருதப்படுகிறது. உலகத்தில் எதுவும் பிரச்சனை இருந்தால் இங்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.