நந்தி வழிபாடு செய்யாமல் பிரதோஷ பலன் கிடைக்காது ஏன்? சிவபெருமானே வழங்கிய அதிகாரம்!

Published : Jan 21, 2026, 08:57 PM IST

Reason behind Nandi Abhishekam : பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு ஏன் பால், இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது? நந்தியின் கொம்புகளுக்கு இடையில் தரிசிப்பதன் ரகசியம் என்ன? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
15
நந்தி வழிபாடு செய்யாமல் பிரதோஷ பலன் கிடைக்காது ஏன்

Reason behind Nandi Abhishekam : பிரதோஷ நாளில் சிவபெருமானை வணங்குவதற்கு முன் நந்திப்பெருமானையே முதலில் வணங்க வேண்டும். அவரை வணங்கி அவர் அனுமதி கொடுத்த பிறகு சிவபெருமானை வணங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஏன் நந்தி பகவானுக்கு முதல் அபிஷேகம் பிரதோஷ நாளில் செய்யப்படுகிறது என்பதை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
சிவபெருமானே வழங்கிய அதிகாரம்

பிரதோஷ வழிபாட்டின் போது நந்தி பகவானுக்கு முதல் அபிஷேகம் செய்யப்படுமாம். அவர் அனுமதி கொடுத்த பிறகு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை பிரதோஷ நேரம். இந்த வேளையில் சிவனுக்கு விரதம் கடைப்பிடித்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறப்படுகிறது. சிவ வழிபாடும், சிவ தரிசனமும் மற்ற நாட்களில் செய்வதை விட பிரதோஷத்தன்று செய்வது மிகவும் விசேஷமானதாகும். 

35
சிவ பெருமானின் அருள்

பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் சிவ பெருமானின் அருள் மட்டுமின்றி அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவ பெருமானுக்கு எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். இந்த விரதத்தை எவர் ஒருவர் முறையாக, தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைபிடிக்கிறாரோ அவருக்கு சிவலோக பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் வரலாறு என்னவென்று நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

45
நந்தி பகவானின் முக்கியத்துவம்: விஷத்தை அருந்திய நிகழ்வு:

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தினார். அந்த விஷத்தின் வெப்பத்தைத் தணிக்க, நந்தி பகவான் தன் மூச்சுக்காற்றால் சிவனை குளிர்வித்ததாகக் கூறப்படுகிறது. அந்த நன்றிக்காகவும், குளிர்ச்சியை நிலைநாட்டவும் நந்திக்கு முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

55
நந்தியின் கொம்புகள் கிடையே சிவனின் தாண்டவம்:

பிரதோஷ நேரத்தில் சிவன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நடனமாடுகிறார். எனவே, நந்தியை வழிபட்டால் நேரடியாக சிவபெருமானின் அருளைப் பெறலாம் என்பதால் அவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் பிரதோஷத்தில் சிவனின் அபிஷேகத்தை பார்க்கும் போது நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்தால் வேண்டியது யாவும் அப்படியே நடக்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories