தெப்ப உற்சவம் என்றால் என்ன? நீர் நிலைகளில் சுவாமி உலா வருவதன் ஆன்மீக ரகசியம் இதுதான்!

Published : Jan 21, 2026, 06:07 PM IST

தெப்ப உற்சவம் என்பது என்ன? நீர் நிலைகளுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? தெப்பத் திருவிழா கொண்டாடப்படுவதன் ஆன்மீக மற்றும் அறிவியல் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.

PREV
14
தெப்ப உற்சவம்:

தெப்ப உற்சவம் என்பது கோயிலில் நடைபெறும் ஒரு திருவிழா. இதில், உற்சவர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்யப்பட்டு கோயில் குளத்தை வரும் வைபவம் தான் தெப்ப உற்சவம் எனப்படும். இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.

தெப்ப உற்சவம்:

தெப்ப திருவிழா என்பது இறைவன் மற்றும் இறைவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு கோயில் தெப்பத்தை வலம் வரும் திருவிழா. இதனை தெப்ப உற்சவம் என்றும் அழைக்கலாம்.

தெப்பத்தின் அமைப்பு:

ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். ஒரு கோயிலுக்கும் ஒரு தெப்பம் ஒன்று கண்டிப்பாக இருக்கும் அதனுள் ஒரு சிறிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த குளத்தில் மிதப்பதற்கு வேண்டிய கட்டைகளை, மூங்கில்களை வைத்து அதன் மேல் பீப்பாய்களை வைத்து வடிவமைத்து கட்டினால் அதன் பிறகு இந்த சுவாமியே வைக்கும் மூங்கில்களையும் மரக்கட்டைகளையும் வைத்து கட்டி இந்த மிதக்கும் படகு போல உருவாக்கி உள்ளனர். அதன் பிறகு மின்விளக்குகளை வைத்து அலங்கரித்து மிதக்கும் அழகாக மாற்றுகின்றனர் இதை இறைவன் இறைதியை வைத்து வலம் வருவதற்கு ஏற்றதாக அமைகிறது

24
தெப்ப உற்சவம் எதற்காக கொண்டாடப்படுகிறது:

தெப்போற்சவம் பெரும்பாலும் சித்திரை மாதத்தில் கோயில்களில் நடைபெறும் திருவிழா என்றாலும் சில கோயில்களின் மரபுப்படி உத்திரயணத்தில் தை பூசத்தில் தெப்ப விழா நடைபெறுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை மறந்து குளக்கரையில் மகிழ்ச்சியான சில்லென இயற்கையின் குளுமையை தர சூரியனின் பரம விரோதியான சுக்கிரனால்தான் முடியும்.நாம் படும் பிரச்னை அனைத்திலிருந்தும் விடுதலை தருபவர் சுக்கிரன் தான். எந்தொரு பிரச்னையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். நம் வீட்டில் தண்ணி அதிகமாக செலவு செய்தால் பணம் வெகு விரைவில் செலவாகும் என்று பெரியோர்களால் சொல்லப்படும் ஏனென்றால் சுக்கிரன் தண்ணீர்க்கு கூறியவன் என்பதால் வீட்டில் பணம் தங்காது என்றும் கூறப்படுகிறது.

34
தெப்ப உற்சவத்தின் சிறப்பு:

தெப்பக்குளம் என்றால் நம் உற்சவரை வலம் வந்து நம்மளை ஆசீர்வதிப்பதற்கு ஒரு திருவிழாவை கொண்டாடப்படுவது இந்த தெப்பத் திருவிழா இறைவன் குளிர்ச்சியாக நம்மை காக்க வேண்டும் அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்வதற்காகவே இந்த தெப்ப திருவிழா நடைபெறுகிறது. தெப்பத்தில் மிதப்பது மூலம் அந்த இறைவன் மற்றும் இறைவி மனம் குளிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் என்று அருள் புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கோவிலுக்கு சென்று வழிபடுவது விட அந்த இறைவன் உலா வந்து மக்களை சந்தித்து அருள் புரிவது மிகவும் சிறப்பு என்று கூறப்படும். தெப்ப திருவிழாவில் இறைவன் ஊர்வலம் வந்து மக்களுக்கு அருள் கொடுக்கிறார். அப்போது என்ன கேட்டு வேண்டினாலும் உடனடியாகவே கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

44
தெப்பக் குளத்தின் அமைப்பு:

தெப்பக்குளம் எப்படி இருக்கும் வேண்டுமென்றால் பச்ச பசுவேரென்று தண்ணீரும் கொஞ்சும் மீன்களும் நிறைந்திருக்க வேண்டும். நடுவில் அழகிய மண்டபம் அமைந்திருக்க வேண்டும். படிகள் நிறைந்த பெரிய குளமாக அமைந்திருக்க வேண்டும் அந்த இறைவன் காண்பதற்கு அழகாக திகழ வேண்டும். பூக்கள் நிறைந்து இருக்க வேண்டும். குளத்தினுள் தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்க வேண்டும் அதில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும். இப்படியான அமைப்பி தெப்பக் குளம் இருக்க அதில் இறைவன் மற்றும் இறைவி சமேதராக வலம் வரும் அழகை அழகு தான்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories