கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி தாயாரை வழிபட கிடைக்கும் 7 நன்மைகள்!
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மனை வணங்குவதால் திருமண யோகம், புத்திர பாக்கியம் மற்றும் தீராத பிணிகள் தீரும் என்பது ஐதீகம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்தது.இது 11-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரான செண்பக பாண்டியனால் கட்டப்பட்டது.
அம்பாள் செண்பகவல்லி:
அம்பாள் செண்பகவல்லி ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையே இகழ்ந்தால் ஈசன் அம்பாலை அறிவுக்கு அழைத்து வர சென்று கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும் பின் சிவனாகவும் காட்டினார். அதை கண்ட அம்பாள் தனது அகந்தையை இழந்தாள் அதன் பிறகு அம்பாள் அருள்தரும் அன்னையாக மாறினார். 7 அடி உயரத்தில் சிலையானால் அவருக்கு செண்பகவல்லி என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் பின்னர் மக்களுக்கு கேட்ட வரங்களை கொடுக்கும் செண்பகவல்லி அம்மனாக காட்சி தந்தார்.
23
கோயிலின் சிறப்புகள்:
இங்கு அம்பாள் செண்பகவல்லி மற்றும் பூவனநாத சுவாமி ஆகிய இருவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இங்கு விநாயகர் நாகர்கள் நந்தியுடன் சுவாமி அம்மன் ஆகியோர் உருவங்களாக உள்ளனர். இங்கு சிறப்பாக இருப்பது அகத்தியர் தீர்த்தம் கிடைக்கிறது. இந்த தீர்த்தமானது அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதால் அகத்தியர் தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட கோயில்:
செண்பக பாண்டியன் என்னும் மன்னன் வெம்பக்கோட்டை பகுதியை ஆண்டு வந்தார். அவரது கனவில் தோன்றிய சிவபெருமான் கோயில் லிங்கம் காணப்படும். அந்த லிங்கத்திற்கு பூவனநாத சுவாமி என்று பெயரிட்டு கோயில் எழுப்பு என்று அசரீரி ஒலித்துள்ளது. அதன்படியே செண்பகப் பாண்டியன் மன்னனும் கோயிலெழுப்பி வழிபாடு செய்து வந்தார். அதன் பிறகு மக்களும் அந்த கோயிலில் வழிபாடு செய்து வந்தனர்.
33
பலன்கள்:
கோயிலில் தாயாராக இருந்து வரும் செண்பகவல்லி அம்மனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள் பெண் குழந்தை பிறந்தால் செண்பகவல்லி என்னும் பெயர் வைக்கும் பழக்கமும் இந்த கோவில்பட்டி ஊரில் வழக்கமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. நோய் நொடியில் இருந்து தீர்வு பெறுவதற்கு இந்த கோயில் சிறந்த தளமாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.