பிரதோஷ வழிபாடு
சோமவார பிரதோஷ திங்கட்கிழமை அன்று அய்யன் சிவனை வழிபடும்போது, நந்தி தேவருக்கும் அருகம்புல் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். சிவனுக்கு மல்லிகை, வில்வம், மரிக்கொழுந்து ஆகிய மலர்களால் பூஜை செய்து வழிபடலாம். பச்சரிசி, பாசிப்பயறு போன்றவை நன்கு ஊறவைத்து அத்துடன் வெல்லம் கலந்து கொள்ளுங்கள். இதனுடன் காப்பரிசி கொஞ்சன் கலந்து நந்திக்கு படைத்து வணங்க வேண்டும். சிவனுக்கு சர்க்கரை பொங்கல், பாயசம், பாகனம் ஆகியவை வைத்து வழிபடலாம். இன்றைய தினம் சிவனை விரதமிருந்து வழிபட்டால், எந்த சோதனையாக இருந்தாலும் தகர்ந்துவிடும். விரதம் இருக்க முடியாதவர்கள் முழுநம்பிக்கையுடன் "ஓம் நம சிவாய" மந்திரத்தை சொன்னால் நினைத்த காரியம் கைகூடும். கெட்ட வினைகள் விலகி நல்ல விஷயங்கள் நடக்க இன்று சிவனை வணங்குங்கள்.
இந்தாண்டு ஏப்ரலில் சோமவார பிரதோஷம் 17ஆம் தேதியாகும். இது தேய்பிறை சோமவார பிரதோஷம். இன்று மாலை 03.15 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 18ஆம் தேதி பகல் 01.20 மணி வரைக்கும் திரியோதசி திதி இருக்கிறது.