துளசி:
வாஸ்துபடி, துளசி செடி மிகவும் புனிதமானது. இதனை நம் வீட்டில் எளிமையாக நடலாம். துளசி செடி மருந்தாகவும் பயன்படுகிறது என சொல்லலாம். இந்து மதத்தில் இது மிகவும் முக்கியமானது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை வீட்டில் நடுவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது என்று கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திர விதிகளின்படி துளசி செடியை தெற்கு திசையில் நடக்கூடாது. இந்த திசையில் இந்த செடியை நடுவதன் மூலம், பொருளாதார நிலை மோசமடையும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, துளசி செடியை கிழக்கு அல்லது வடக்கு, வடகிழக்கில் நடுவது எப்போதும் மங்களகரமானது.