இந்து சாஸ்திரத்தின்படி அமாவாசை தினங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் வழங்க வேண்டும். இதனால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களது அருள் கிடைத்தால் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். செல்வ, செழிப்பு கிடைக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு சிறப்பு நாளில் முன்னோரை வழிபட வேண்டும்.
தினமும் காலையில் எழுந்ததும், தெற்கு திசையை நோக்கி முன்னோரை மனதில் நினைத்து கும்பிட வேண்டும். இதனால் குடும்பத்தில் முன்னோரின் ஆசீர்வாதம் நிலைத்திருக்கும். சிலர் வீட்டில் முன்னோரின் படங்களை வைப்பார்கள். அதை வைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் சில விதிகளை பின்பற்ற வேண்டும்.
வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டில் தவறுதலாக கூட சில இடங்களில் முன்னோர்களின் படத்தை மாட்டி வைக்கக் கூடாது. முன்னோர்களின் படத்தை மரத்தடியில் வைக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தில் முன்னோர்களின் படங்களைத் தொங்கவிடுவது மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. குறிப்பாக வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னோர்களின் படங்கள் வைக்கக்கூடாது.
வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பார்க்கக்கூடிய இடத்தில் முன்னோரின் படத்தை வைக்க வேண்டும். ஆனால் பிரதான கதவில் முன்னோரின் படத்தை வைக்கக் கூடாது. வெளியாட்களின் பார்வை முன்னோர்கள் மீது படும் போது, வீட்டில் எதிர்மறை ஆற்றல் வர வாய்ப்புள்ளது.
Vastu Tips-Keep this for flow of money in office
வீட்டு பூஜை அறையில் முன்னோரின் படங்களை வைக்க வேண்டாம். முன்னோர் படங்களை தெய்வங்களுக்கு இணையாக வைக்கக்கூடாது. படுக்கையறை, சமையலறை, வீட்டின் நடுவில் முன்னோரின் படத்தை வைக்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் முன்னோரின் படத்தை வைப்பதால் வாஸ்து குறைபாடுகள் ஏற்படும்.
எங்கு வைக்க வேண்டும்?
வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, முன்னோரின் படத்தை வடக்கு திசை நோக்கி வையுங்கள். முன்னோர் தெற்கில் வாசம் செய்வார்கள் என நம்பப்படுகிறது. ஆகவே வடக்கு திசையில் இருக்கும் சுவர்களில் முன்னோரின் படங்களை வைக்கலாம். முன்னோரின் படங்களை வீட்டில் வைக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள வாஸ்து விதிகளை பின்பற்றினால் வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் பெருகும்.