இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு தனி இடமுண்டு. ஒருவருடைய வாழ்க்கையில் நிம்மதியும், பொருளாதார வசதியும் மேம்பட வாஸ்து சாஸ்திரம் முக்கியமானது. இந்து மதத்தைப் பொறுத்தவரை மஞ்சள் மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. அதற்கு வாஸ்துவிலும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதை வைத்து பரிகாரம் செய்தால் வீட்டில் சுபிட்சம் பெருகும்.
பொருளாதாரம் மேம்பட பரிகாரம் :
வியாழன்கிழமை மஞ்சளை விஷ்ணுவுக்கு சமர்ப்பித்தால் நல்லது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இப்படி மகாவிஷ்ணுவை மகிழ்வித்தால், செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியும் மகிழ்வார். இந்த பரிகாரம் செய்தால் வீட்டில் உள்ள நிதி நெருக்கடி முற்றிலும் நீங்கும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைக்கும்.
தடையான வேலை முடிய பரிகாரம்:
மஞ்சள் குரு பகவானுடன் தொடர்பு கொண்டுள்ளது. கடவுள்களுக்கு எல்லாம் குருவான வியாழன் பகவானுக்கு மஞ்சள் வண்ண பொருள்கள் நெருக்கமானது. ஆகவே தான் மஞ்சள் வண்ண உடைகள், பனங்கற்கண்டு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் ஆகியவை வியாழன் அன்று தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் நின்றுபோன பணிகள் கூட மீண்டும் நடக்கும் என்பது ஐதீகம்.
தடைபட்ட பணம் திரும்ப வர பரிகாரம்:
உங்கள் பணம் எங்கேனும் சிக்கி திரும்ப கிடைக்காமல் இருந்தால், மஞ்சள் பொடி உங்களுக்கு தீர்வு தரும். மஞ்சளில் கொஞ்சம் அரிசியை கலக்கவும். மஞ்சள் நன்கு கலந்த அரிசியை சிவப்பு துணியில் வைத்து கட்டி, அந்த சிறிய முடிச்சை பணப்பையில் வைத்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் உங்களுடைய பணம் ஆசீர்வதிக்கப்படும். விரைவில் நீங்கள் இழந்த பணம் திரும்ப வரும்.
இதையும் படிங்க: புரிதல் இல்லாத கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரங்கள்!!