நொச்சி இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. தலைவலிக்கு ஆவி பிடிக்கும் போது நொச்சி இலையை பயன்படுத்தலாம், தைலம் தயாரிப்பதிலும் இது பயன்படுகிறது. ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நொச்சி இலைகள் தெய்வ அம்சம் பொருந்தியவை.
நொச்சி மரத்தை குலதெய்வமாக கருதி, மஞ்சள் குங்குமம் பூசி குலதெய்வத்தை ஆவாகனம் செய்ய வேண்டும். மண்பானை அல்லது பித்தளைச் செம்பில் தண்ணீர் நிரப்பி வையுங்கள். இதன் அருகே முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து, அவற்றிற்கும் மஞ்சள், குங்குமம் இட்டு கொஞ்சம் பூக்களை சாற்றி விடுங்கள். குலதெய்வத்திற்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக தயார் செய்து மண் தட்டு அல்லது இலையில் படையுங்கள். பின்னர் தீப, தூப ஆராதனை செய்து குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். குலதெய்வம் யாரென்று தெரியாத காரணத்தால் குழம்பி போகவேண்டாம்.. "மனதினுள் குலதெய்வமாகிய உம்மை மன்றாடுகிறோம். உம்மையே நினைத்து வழிபடுகிறோம். இன்னல் எல்லாவற்றிலும் பாதுகாத்து வழிநடத்து" என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.