இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள்களுக்கும் வாஸ்து சில விதிகளை கூறுகிறது. அதை போலவே வீட்டில் உள்ள செடிகள் குறித்தும் சில விதிகள் கூறப்பட்டுள்ளன. வீட்டில் செடிகளை நடுவதன் மூலம், குளிர்ச்சியும், நேர்மறை ஆற்றலும் பரவுகிறது. ஆனால் அரச மரத்தை வீட்டில் நடுவது மங்களகரமானதாக கருதப்படவில்லை.
ஜோதிடத்தின்படி, வீட்டின் பிரதான வாசலில் எந்த மரத்தை நடுவதன் மூலம், லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்வார் என்று இங்கு காணலாம். உண்மையில் அவற்றை வீட்டில் நடுவதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும்.
வீட்டில் வன்னி மரம் வைக்கலாம்:
வன்னி மரத்தை வீட்டின் நுழைவு வாயிலின் இடது பக்கத்தில் நட வேண்டும். அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டின் பிரதான வாசலில் வன்னி மரக்கன்றை நடுவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. லட்சுமி தேவியும் அங்கே இருக்கிறார். வன்னி மரம் வைப்பதால் வீட்டில் நேர்மறையை கொண்டு வரும்.