தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 3 நாட்களுக்கு இலவச தரிசனம் மட்டும் - கட்டணத் தரிசனம் ரத்து!

Published : Jan 22, 2026, 04:46 PM IST

Palani Murugan Temple Free Darshan For 3 Days For Thaipusam 2026 : பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

PREV
16
பக்தர்களுக்கு நற்செய்தி! 3 நாட்களுக்கு இலவச தரிசனம் மட்டும்

தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் முருகனுக்கு தற்போது பக்தர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள் என்றே கூறலாம். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் ஆடி கிருத்திகை சஷ்டி விரதம் பக்தர்களால் தற்போது மிகுந்த உணர்வுடன் கடைப்பிடித்து வருகின்றன வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் வருகின்றது.தை மாத பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில்தான் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

26
Palani Dhandayuthapani Temple festival updates

அன்று முருகன் கோயிலில் மிகச் சிறப்பாக இருக்கும். தைபூசத் திருவிழா முருகனுக்கு உகந்ததாக கூறப்படுகிறது. அறுபடை கோயிலில் மிக சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படும் அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை குறிகளில் ஒன்றான பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இலவச தரிசனம் மூன்று நாட்களுக்கு செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

36
Special entry cancelled in Palani for 3 days

முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஜனவரி 31, பிப்ரவரி1, 2 ஆகிய மூன்று நாட்களுக்குக் கட்டண தரிசன முறையை ரத்து செய்வது இலவசமாக அனைத்து பாதைகளிலும் செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

46
Palani Thaipusam 2026 news

தைப்பூசம் எப்படி உருவானது:

தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த சூரபத்மன் என்ற அசுரனை அழிக்க, முருகனின் அன்னையின் பார்வதி தேவி தனது சக்தியைத் திரட்டி முருகனுக்கு வேல் அளித்தார். அந்த வேல் மூலம் முருகன் சூரபத்மனை வதைத்து செய்து வெற்றி கண்ட நாள் தான் தைப்பூசம். பிறகு தன் அன்னையை போற்றும் விதமாக முருகன் வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கத்தை கொண்டு அசுரனை வென்று கொண்டாடப்படும் நாளாக விளங்குகிறது.

தைப்பூச நேர்த்தி கடன்கள்:

தை மாதம் அறுவடைக்காலம் என்பதால், விளைந்த பொருட்களை முருகனுக்குச் சமர்ப்பிக்கக் காவடி எடுத்துவரும் நேத்தி கடன் முருகன் கோயிலுக்கு உண்டு அதுவும் குறிப்பாக பழனிக்கு உண்டு.

56
Palani Murugan Temple Free Darshan

அழகு குத்துதல்:

தம் உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்கவும் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படவும் தொழில் ரீதியாகவும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் முருகனை மனதார நினைத்து மெல்லிய பத்தடி 15 அடி நீளம் உள்ள கம்பியினை வாயில் குத்துவதே அழகு குத்துதல் எனப்படும் இது முருகனுக்கு மனதார நினைத்து குத்திக்கொண்டு பேத்தி கடன் செய்கின்றனர்.

மொட்டை அடித்தல்:

தம் மனதில் ஏற்பட்ட பிரச்சினைக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கும் முருகனின் மனதார நினைத்து என் குறைகளை தீர்த்து வைப்பா என்று பக்தர்கள் மொட்டை அடித்துக் கொண்டும் காது குத்தியும் நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்கின்றனர்.

பாதயாத்திரை:

ஒரு சில பக்தர்கள் அவர்கள் வீட்டில் இருந்தே பழனிக்கும் பாதையாத்திரை செய்யும் வழக்கமும் உண்டு மனதார நினைத்து மாலையிட்டு சுத்தபத்தமாக இருந்து பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டுச் சென்றவரும் இருக்கின்றனர். தைப்பூச திருநாளில் பக்தர்கள் முருகன் மீது அதீத அன்பு கொண்டவராகவும் முருகன் நம் குறைகளை தீர்த்து வைப்பார் என்பதற்காகவும் அவர்களால் முடிந்த நேர்த்திக்கடனை பழனியில் செய்கின்றனர்.

66
பக்தர்களின் கூட்டம்:

தைப்பூசத் திருநாளன்று பக்தர்கள் கோடிக்கணக்கான பேர் வருவார்கள். நீண்ட வரிசை இருப்பதாகவும் பக்தர்களால அதனை ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. சிலர் உடம்பு உபாதைகளாலும் பிரச்சினைகள் ஏற்படுவதாலும் முன்னெச்சரிக்கையாக இலவச கட்டண தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்களுக்கு ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களுக்கு பக்தர்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் தண்டாயுதபாணியை எளிதில் தரிசிக்க முடியும். மேலும், கடந்த முறை கோயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முறை இலவச கட்டணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories