Spiritual: தூங்கும் போது வரும் கனவில் இத்தனை வகைகள் இருக்கா.? கனவு எப்போது பலிக்கும் தெரியுமா?!

Published : Nov 19, 2025, 12:48 PM IST

ஜோதிடத்தின் அடிப்படையில் கனவுகள் ஏன் வருகின்றன அவற்றின் வகைகள் என்ன என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. எந்த நேரத்தில் காணும் கனவு எப்போது பலிக்கும் கெட்ட கனவு கண்டால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் இது விவரிக்கிறது.

PREV
111
கனவுகள்… மனிதனை விட்டு ஒரு நொடி கூட விலகாதவை.

கனவுகள்… மனிதனை விட்டு ஒரு நொடி கூட விலகாதவை. நாம் தூங்கும்போது மட்டுமல்ல, விழித்திருக்கும்போதும் நம்மை ஆட்டிப் படைப்பவை. ஆனால் இரவில் வரும் கனவுகளுக்கு ஒரு தனி மர்மமும், மரியாதையும் உண்டு. ஆயுர்வேதமும், ஜோதிடமும், பிரச்ன மார்க்கமும் இதை விரிவாகச் சொல்கின்றன.

211
கனவு வருவதற்கு என்ன காரணம்? பிரச்ன மார்க்கம் சொல்லும் காரணங்கள்:
  • வாதம், பித்தம், கபம் என்னும் திரிதோஷங்களின் ஏற்ற இறக்கம் 
  • தசை-புக்தி காலங்களின் தாக்கம் ஒரே பொருளை அதிகமாக நினைத்தல் அல்லது கவலைப்படுதல் 
  • எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை 
  • உடலில் மறைந்திருக்கும் உள்நோய்கள் 
  • முற்பிறவியில் கொண்ட பழக்க வழக்கங்கள்
311
திரிதோஷங்களும் கனவும்
  1. வாத தோஷம் அதிகமானால் → மலையேறுதல், மரத்தில் ஏறுதல், ஆகாயத்தில் பறத்தல் போன்ற கனவு 
  2. பித்தம் அதிகமானால் → தங்கம், சிவப்பு மலர்கள், நெருப்பு, சூரியன் போன்ற ஒளிவீசும் பொருட்கள் 
  3. கபம் அதிகமானால் → சந்திரன், நட்சத்திரங்கள், வெள்ளைத் தாமரை, நதி, ஏரி போன்றவை

இவை மூன்றும் தோஷத்தால் வரும் கனவுகளாதலால் பலன் மிகக் குறைவு.

411
கனவின் ஏழு வகைகள் (பிரச்ன மார்க்கப்படி)

திரிஷ்டம் – பார்த்ததை கனவில் காணுதல் 

ஷ்ருதம் – கேட்டதை கனவில் காணுதல் 

அனுபூதம் – தொட்டது, முகர்ந்தது, ருசித்தவற்றை காணுதல் 

பிரார்த்திதம் – ஆசைப்பட்டவற்றை காணுதல் 

கல்பிதம் – கற்பனையில் உருவானவை 

பாவஜம் – மேற்கண்டவற்றில் எதிலும் சேராதவை 

தோஷஜம் – திரிதோஷத்தால் வருபவை

இதில் முதல் ஐந்தும்  மற்றும் பகல் கனவுகளும் பொதுவாகப் பலனளிப்பதில்லை. பகலில் தூங்குவதையே ஆயுர்வேதம் தடை செய்கிறது!

511
பலன் தராத கனவுகள்
  • பகலில் கண்டது 
  • காலையில் எழுந்ததும் மறந்து போனது 
  • நீண்ட நேரம் தொடர்ந்து வருவது 
  • நள்ளிரவுக்கு முன் (முதல்-இரண்டாம் யாமம்) வருவது
  •  கனவு கண்டுவிட்டு மீண்டும் தூங்கினால் பலன் குறையும் 
611
எந்த நேரக் கனவு எப்போது பலிக்கும்?

இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

முதல் யாமம் → 1 வருடத்துக்குள் பலிக்கும் 

இரண்டாம் யாமம் → 8 மாதங்களுக்குள் 

மூன்றாம் யாமம் → 3 மாதங்களுக்குள் 

நான்காம் யாமம் (அதிகாலை) → 10 நாட்களுக்குள் அல்லது உடனடியாகவே

711
சுப கனவுகள் (நல்ல பலன் தருபவை)

தெய்வங்கள், பசு, எருது, உயிருடன் இருக்கும் உறவினர்கள், அரசர், எரியும் நெருப்பு, தூய்மையான குளம், வெள்ளை ஆடை அணிந்த சிரிக்கும் குழந்தைகள், வெள்ளை மலர்கள், யானை, குதிரை, பல்லக்கு, கிழக்கு/வடக்கு திசைப் பயணம், எதிரிகளை வெல்லுதல், முன்னோர்கள் மகிழ்ந்த நிலை, ஆபத்தில் இருந்து தப்புதல், இவை எல்லாம் மிகவும் சுபம். சில சுவாரஸ்யமான சுப கனவுகள்:

அழுக்குத் தாமரை இலையில் பாயசம், நெய் சாப்பிடுவது போன்ற கனவு வந்தால் நீங்கள் பெரிய அறிஞர் ஆவீர்கள் . அத்போல் குயில் இனிய குரலில் கூவுவதும் நீங்கள் திடுக்கிட்டு விழித்தால் அழகும் இனிமையும் கொண்ட மனைவி கிடைப்பாள் . அதேபோல் நோயாளி சூரியன் மற்றும் சந்திரனை கனவி் கண்டால்  அவர் விரைவில் குணம் அடைவார்.

811
கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனே எழுந்து கை-கால் கழுவி, திருநீறு பூசி, இறைநாமத்தை 12 முறை சொல்லி வணங்கவும். தானம், ஜெபம், தியானம், யாகம் போன்றவற்றால் கெடு பலனைத் தவிர்க்கலாம். 

911
நல்ல கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

நல்ல கனவு வந்தால் உடனே எழுந்து குளித்து இறைவனை வணங்கி, அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது மிகவும் சிறந்தது என்று பெரியோர் சொல்கிறார்கள். 

1011
கனவு என்பது தூக்கத்தின் விளையாட்டு

கனவு என்பது வெறும் தூக்கத்தின் விளையாட்டு மட்டுமல்ல… நம் உடல், மனம், கிரக நிலை, முற்பிறவி என எல்லாமே அதில் பிரதிபலிக்கின்றன. அதனால் தான் “கனவு கண்டுவிட்டு மறுபடியும் தூங்காதே… உடனே எழுந்து இறைவனை நினை!” என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

1111
கனவு என்பது நமது ஆழ்மனதின் அழகிய சிந்தனை

கனவு என்பது நமது ஆழ்மனதின் அழகிய கண்ணாடி மட்டுமல்ல… அது நமக்கான இறைவனின் மென்மையான வழிகாட்டியும் கூட.  ஒவ்வொரு காலையிலும் எழுந்தவுடன் நன்றியோடு சிரியுங்கள் .இன்னொரு கனவு எனக்காகக் காத்திருக்கிறது என்று. நல்ல கனவை நினைத்து நாள் முழுக்க நம்பிக்கையோடு செயல்படுங்கள். கெட்ட கனவு வந்தாலும், “இது என்னை இன்னும் வலிமையாக்க வந்திருக்கிறது” என்று எழுந்து நிற்குங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories