நவராத்திரி 2023: நிதி நெருக்கடியா? இந்த பரிகாரம் செய்யுங்கள்; இனி பணத் தட்டுப்பாடு இருக்காது!!

First Published | Oct 19, 2023, 1:37 PM IST

இந்த நவராத்திரியில் உங்கள் நிதி பிரச்சனை அனைத்தும் நீக்க உதவும் சூப்பரான பரிகாரம் குறித்து இங்கு பார்க்கலாம்..

தற்போது நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. இதில், இந்த 9 நாட்களில் துர்க்கையின் ஒன்பது வெவ்வேறு வடிவங்கள் வழிபடப்படுகின்றன. இந்த திருவிழாவில், துர்க்கை யானை மீது ஏறி வர உள்ளார். இது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சிறப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. நவராத்திரியின் போது,   பக்தர்கள் ஒன்பது வெவ்வேறு நாட்களில் துர்கா தேவியை மகிழ்விக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதனால் அன்னை மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு அருள்புரிகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த முறை வெற்றிலையை வைத்து துர்க்கை தேவியை மகிழ்விக்கலாம். அது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்!

நவராத்திரி நாட்களில் வெற்றிலை பரிகாரங்களைச் செய்யுங்கள்:

வெற்றிலையுடன் உங்கள் நிதி நிலையை பலப்படுத்துங்கள்: நவராத்திரியின் போது,   பக்தர்கள் வெற்றிலையில் துர்கா மந்திரத்தை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு எழுதி, அன்னை தேவிக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் நவமி நாளில், இந்த வெற்றிலையை எடுத்து, சிவப்பு துணியில் கட்டி உங்கள் பத்திரத்தில் வைக்கவும். இந்த பரிகாரத்தைச் செய்தால் உங்கள் நிதி பிரச்சனை விரைவில் நீங்கும்.

Tap to resize

தொழில், வியாபாரத்தில் வெற்றி பெற: ஒருவரால் வேலை அல்லது வியாபாரத்தில் வெற்றி பெற முடியாவிட்டால், நவராத்திரியின் போது,   தினமும் மாலை துர்க்கைக்கு வெற்றிலையை அர்ச்சனை செய்யுங்கள். இதைச் செய்தால் வெற்றி கிடைக்கும்.

இதையும் படிங்க:  30 ஆண்டுகளுக்குப் பிறகு நவராத்திரியில் நடக்கும் அற்புதம்..! மிஸ்பண்ணிடாதீங்க..!!

எல்லா துறையிலும் வெற்றி கிடைக்க: ஒருவருக்கு எந்தத் துறையிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் நவராத்திரியின் போது வெற்றிலையின் இருபுறமும் கடுகு எண்ணெயைத் தடவி மாலையில் துர்க்கைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நவராத்திரியின் கடைசி நாளில், இவற்றை எடுத்து  துர்க்கையின் கோவிலுக்குப் பின்னால் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நீங்கள் எல்லா திரையிலும் சுலபமாக வெற்றி பெற முடியும்.

இதையும் படிங்க:  Betel Leaf : சாப்பிட்ட பிறகு வெற்றிலை சாப்பிடுவது ஏன்? இந்த இலையில் மறைந்திருக்கும் நன்மைகள் இதோ..!!

நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வர: வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால், நவராத்திரியின் போது துர்க்கைக்கு தொடர்ந்து 9 நாட்கள் வெற்றிலையுடன் குங்குமப்பூவை அர்ப்பணிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், நேர்மறை ஆற்றல் சுற்றுச்சூழலில் பரவத் தொடங்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!