இந்த ஆண்டின் மிகப்பெரிய பெயர்ச்சி அக்டோபர் 30 ஆம் தேதி நடக்க உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி, சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, ராகு அக்டோபர் 30-ம் தேதி மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். தற்போது ராகு மேஷத்திலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். இந்த ஆண்டின் மிகப்பெரிய ராசி மாற்றமாக இது கருதப்படுகிறது.