
மனிதர்கள் அன்றாடம் வேலை செய்வதே அதன் மூலமாக பணத்தை ஈட்டி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது தான். உழைக்கும் பணத்தை செலவு போக சேர்த்து வைப்பது எதிர்காலத்திற்கு உதவும். நம்முடைய சேமிப்பு தான் அவசர காலங்களில் நம்மை பாதுகாக்கும். ஒருவருடைய முன்னேற்றமே சேமிப்பில் தான் உள்ளது. ஆனால் சிலருக்கு என்ன செய்தாலும் கையில் பணமே நிற்காது. இப்படி ஆவது தரித்திரம் இருப்பதை குறிக்கிறது. இதனை மொத்தமாக விரட்டி, பணம் சேர்ப்பது எப்படி? என இந்த பதிவில் காணலாம்.
பணம் நிலையான சொத்து அல்ல. இன்று பணக்காரராக இருப்பவர் இன்னொரு நாளில் ஏழையாக கூட மாறலாம். விதியை நம்மால் கணிக்க முடியாது. ஆனால் நமக்கான சேமிப்பை தக்க வைப்பது அவசியம். அதுவே நம்முடைய ஆபத்து காலத்தில் நமக்கு உதவும். சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யும் முன்பு சேமிக்கவேண்டும். சேமிப்பு வெறும் சேமிப்பாக இல்லாமல் முதலீடாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் செலவு செய்யும் பழக்கத்தை கைவிடுங்கள்.
உங்களுடைய வீட்டின் எல்லா பகுதியிலும் பணத்தின் வாசனை இருக்கவேண்டும். அதாவது பணம் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள எல்லா பணத்தையும் எடுத்து செலவு செய்வதோ, மணி பர்சில் மட்டும் பணம் வைப்பதோ கூடாது. பணம் சேரக்கூடிய அனைத்து பகுதியிலும் சில்லறைகள் தொடங்கி நோட்டு வரை எல்லா காசும் கொஞ்சம் இருக்க வேண்டும். பணமே இல்லாமல் அறையை வைக்கக்கூடாது. அன்னபூரணி வாசம் செய்யும் சமையல் அறையில் பணம் இல்லாமல் இருக்கக் கூடாது.
அந்த காலங்களில் வீட்டு பெண்கள் சமையலறையில் பணத்தை மறைத்து வைத்திருப்பார்கள். மசாலா டப்பா முதல் அரிசி மூட்டை வரை பணம் ஒளித்து வைக்காத இடம் இருக்காது. இதுவே பணத்தை சேமிக்கும் முக்கிய விதி எனலாம். இதை பின்பற்றும் வீடுகளில் பணம் குறையாமல் இருக்கும். அடிக்கடி பணத்தை எண்ணிப் பார்ப்பது நல்லதல்ல. சேமிக்கும் பணத்தை அடிக்கடி எண்ணினாலும் பணம் சேராது என்பது ஐதீகம்.
வீட்டில் ஒருவர் மட்டும் பணத்தை சேர்த்து வைக்காமல் அந்த வீட்டு குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் தனித்தனியாக பணத்தை சேமிக்க வேண்டும். குழந்தைகளை சின்ன வயதிலேயே உண்டியலில் பணம் சேமிக்க பழக்கவேண்டும். கோயிலுக்கு போக எப்போதும் மண் உண்டியலில் காசு சேர்த்து வையுங்கள். கோயில் உண்டியலில் கஞ்சத்தனமாக சில்லறைகளை போடாமல் அவ்வப்போது ரூபாய் நோட்டுகளையும் கடவுளுக்கு வழங்குங்கள்.
இதையும் படிங்க: அள்ள அள்ள குறையாமல் பணம் வர.. கற்பூரத்தை கொண்டு 'இத' மட்டும் செய்ங்க..
பணம் சேமிக்கும் முறை;
பணத்தை வெளிப்படையாக வைக்காமல் ஒளித்து வைத்து சேமிக்க வேண்டும். பணத்தை தந்திரமாக மறைத்து வைப்பவர்களுக்கு அது சேர்ந்து கொண்டேயிருக்கும். பணம் அனைத்து நேரத்திலும் இருக்காது. அதனை இருக்கும் சமயங்களில் பத்திரமாக சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
சமையலறையில் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ள பெண்கள் கையில் பணம் ஏராளமாக சேரும் யோகம் உண்டு.பெண்களுடைய கரங்களில் சுக்கிரன் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. இப்படி, சுக்கிரனின் அருள் இருக்கும் பெண்கள் பணத்தை சேர்த்து வைப்பதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் பணம் சேமிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.
இதையும் படிங்க: வீட்டில் இந்த திசையில் மஞ்சள் நிற பொருட்களை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்!
பணம் சேர செய்யக் கூடாத தவறுகள்;
சமையலறையை பணம் சேர்க்கும் இடமாக வைத்துள்ள பெண்களுடைய கைகளால் சமைக்கப்படும் உணவினை வீணாக்கக்கூடாது. அப்படி வீண் செய்தால் பணம் கை சேராமல் இருக்கும். சமையல் செய்யும்போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் உணவினை அடிப்பிடிக்க வைக்கக்கூடாது. உணவு அடிபிடிப்பது வீட்டில் தரித்திரம் வர வழி வகுக்கும்.
இதனால் வீட்டில் பணம் சேராமல் செலவாகிக் கொண்டே இருக்கும். சமையல் செய்யும்போது அடிக்கடி அடி பிடிப்பது, சமையலுக்கு பயன்படுத்தப்படும் கரித்துணி எரிந்து போவது ஆகிய சம்பவங்கள் வீட்டில் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதிரி செயல்கள் அடிக்கடி நடந்தால் வீட்டில் பணம் சேராது.
எப்போதும் வீட்டில் பால் காய்ச்சும் போது கவனமாக இருக்க வேண்டும். பால் பாத்திரங்களை சுத்தமாக துலக்கி பால் காய்க்க வேண்டும். பால் பாத்திரத்தில் அடிபிடிப்பது, பால் திரிந்து போவது போன்றவை கெட்ட அறிகுறிகளாகும். சமைக்கும் சோறு குழைவது, உணவில் உப்பு அதிகமாக சேர்ப்பது போன்றவற்றை செய்வதால் வீட்டில் தரித்திரம் வரும். இப்படி அடிக்கடி நடந்தால் வீட்டில் பணம் சேராமல் இருக்கும். ஆகவே இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.