ரயில்வே டூர் பேக்கேஜ்: ரூ.55,000 க்கு கங்கோத்ரி - யமுனோத்ரி ஆன்மிகச் சுற்றுலா!

First Published Oct 22, 2024, 9:58 AM IST

IRCTC Tour Package: ஆண்டுதோறும் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். பூமியும் வானமும் சந்திக்கும் இடங்களாக நம்பப்படும் இந்தப் புனிதத் தலங்களுக்குச் செல்ல ரயில்வே சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேக்கேஜை வழங்குகிறது.

Char Dham Yatra

இந்து மதத்தில் சார் தாம் யாத்திரைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வாழ்நாளில் ஒருமுறை சார் தாம் சென்று வந்தால் பிறவிப் பாவங்கள் அழியும் என்பது நம்பிக்கை. கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி யாத்திரை தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த புனிதத் தலங்களில் பூமியும் வானமும் சந்திக்கின்றன என்று கூறப்படுகிறது.

Gangotri Yamunotri Yatra

குடும்பத்துடன் கங்கோத்ரி-யமுனோத்ரிக்கு செல்ல விரும்பினால், நீங்கள் IRCTC பேக்கேஜை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த பேக்கேஜ் மூலம் இந்த இரண்டு புனிதத் தலங்களுக்கும் எளிதாகச் சென்று வரலாம். இந்தப் பேக்கேஜில், உணவு, தங்குமிடம் மற்றும் பயணத்திற்கான ஏற்பாடுகளும் அடங்கும்.

Latest Videos


Indian Railways

ஐஆர்சிடிசி வழங்கும் இந்த பேக்கேஜின் பெயர் கங்கோத்ரி-யமுனோத்ரி யாத்ரா. இந்தத் தொகுப்பில் நீங்கள் 9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்தப் பயணம் இந்தூரில் இருந்து தொடங்கும். இதில் ரிஷிகேஷ், கர்சாலி, ஹர்சில், ஹனோல், ஹரித்வார் போன்ற இடங்களுக்குச் செல்லலாம்.

Spiritual tourism

ரிஷிகேஷில் ராம் ஜூலா ஆரத்தியை தரிசிக்கலாம். கர்சாலியில் ஜாங்கிச்சட்டி வெந்நீர் ஊற்றுக்கும் செல்லலாம். ஹனோல் மஹாசு தேவ்தா கோவில், லகமண்டல் கோவில்களுக்கும் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். யமுனோத்ரி
ஹரித்வாரில் பாரத மாதா கோவில், மாயா தேவி கோவில்களுக்குப் போகலாம்.

Kedarnath and Yamunotri Dham

இந்தத் தொகுப்பில் ஸ்டாண்டர்டு டிக்கெட் முன்பதிவு செய்தால், ரூ.55065 செலவாகும். டீலக்ஸ் பேக்கேஜை முன்பதிவு செய்தால், ரூ.58940 செலவாகும். 5 முதல் 11 வயதுடைய குழந்தையை உடன் அழைத்துச் சென்றாலும் இதே கட்டணம் பொருந்தும்.

Char Dham Yatra 2024

பயணம் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், பேக்கேஜ் கட்டணத்தில் ஒரு நபருக்கு ரூ.250 வீதம் கழித்துவிட்டு, மீதி கட்டணம் திரும்பக் கிடைக்கும். இதேபோல, பேக்கேஜ் தொடங்குவதற்கு 8 முதல் 14 நாட்களுக்கு முன்பு டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், பேக்கேஜ் கட்டணத்தில் 25 சதவீதம் கழிக்கப்படும். 4 முதல் 7 நாட்களுக்கு முன்பு டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், கட்டணத்தில் 50 சதவீதம் கழித்துக்கொள்ளப்படும். 4 நாட்களுக்கு முன் டிக்கெட்டை கேன்சல் செய்தால் டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காது.

click me!